மிக எளிதாக செய்யக்கூடிய குழம்பு வகைகள், மசியல் மற்றும் பச்சடி!

Types of gravy that are easy to make
kuzhambu recipesImage credit - youtube.com
Published on

கொள்ளு உருண்டை காரக்குழம்பு:

தேவையான பொருட்கள்:

கொள்ளு _200 கிராம்

காய்ந்த மிளகாய் _6

துவரம்பருப்பு _4 ஸ்பூன்

கறுப்பு உளுந்து _4 ஸ்பூன்

புளி _ஒரு நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி _2 ஸ்பூன்

எண்ணெய், உப்பு தேவையான அளவு

செய்முறை: துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை போட்டு நன்கு கிளறி எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து குழம்பை தயாரிக்கவும். உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து ஆவியில்  வேக விட்டு எடுத்து குழம்பில் போட்டு இறக்கவும்.

கொள்ளு உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புச்சத்தை குறைக்கும்.

புடலங்காய் பொரித்த குழம்பு

தேவையான பொருட்கள்

புடலங்காய் _1/4 கிலோ

தேங்காய் துருவல் _6 ஸ்பூன்

பாசி பருப்பு _1 கப்

மளகு, சீரகம் தலா _1/2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் _ 1

கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தலா _1/2 ஸ்பூன்

எண்ணெய், உப்பு _ தேவைக்கு

கறிவேப்பிலை _ சிறிதளவு

செய்முறை: புடலங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து வேகவிடவும் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

புடலங்காயுடன் தேவையான உப்பு சேர்த்து வேக விடவும் அரைத்த மசாலா மற்றும் வேக வைத்த பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு  கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கொதித்து கொண்டிருக்கும் காய்_பருப்பு கலவையில் கொட்டி கருவேப்பிலை, பெருங்காயத்தூள், போட்டு இறக்கவும். புடலங்காய் பத்திய சமையலுக்கு ஏற்றது.

பிடி கருணை மசியல்: 

தேவையான பொருட்கள்

பிடி கருணை கிழங்கு _1/4கிலோ

பச்சை மிளகாய் _1

இஞ்சி _ஒரு சிறிய துண்டு

எலுமிச்சம் பழம் _1

வெல்லம் பொடி _2 ஸ்பூன்

கடுகு, கடலைப்பருப்பு தலா _1 ஸ்பூன்

மஞ்சள் தூள் _1 சிட்டிகை

பெருங்காயத்தூள் _1/2 ஸ்பூன்

எண்ணெய், உப்பு_ தேவையான அளவு

செய்முறை:  பிடி கருணையை குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கி தோல் உரித்து நன்கு மசித்து கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு மசித்த கிழங்குடன் சேர்த்து உப்பு சேர்த்து எலுமிச்சம் பழம் பிழிந்து கலக்கவும். கடைசியாக வெல்லத் தூள் சேர்த்து இறக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!
Types of gravy that are easy to make

பரங்கி பச்சடி

தேவையான பொருட்கள்;

சிவப்பு பரங்கிக் கீற்று _1/2 கிலோ

தேங்காய் துருவல் _4 ஸ்பூன்

பச்சை மிளகாய் _1

பொடித்த வெல்லம் _4 ஸ்பூன்

புளித்தண்ணீர் _4 ஸ்பூன்

கடுகு _1/2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் _1

எண்ணெய், உப்பு_ தேவையான அளவு

செய்முறை:  பரங்கிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி உப்பு, புளித்தண்ணீர், வெல்லம் சேர்த்து வேக விடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து இத்துடன் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டவும். இந்த பச்சடி பொரித்த குழம்புக்கு சிறந்த காம்பினேஷன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com