வெயிலுக்கு இதம் தரும் நீர் மோர் வகைகள்!

நீர் மோர்...
நீர் மோர்...www.youtube.com

கோடைக் காலம் தொடங்கி விட்டது. பகல் 11 மணி அளவிலேயே வெளியில் செல்ல முடியாமல் வெயில் கொளுத்துகிறது. இந்த வெயில் உடல் நலத்தை நிச்சயம் பாதிக்கும். சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறைவதால் சத்து சமனற்ற நிலையில் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். நம் உடலில் தேவையான நீர் சத்து இருந்தால் மட்டுமே நம்மால் அன்றாட பணிகளை உற்சாகமாக மேற்கொள்ள முடியும். இதற்கு தகுந்த பானமாக இருக்கிறது இயற்கை பானமான நீர்மோர். தேவையான தண்ணீருடன் இந்த நீர்மோர் வகைகளையும் அடிக்கடி எடுத்துக் கொண்டால் இந்த வெயிலை நிச்சயம் நம்மால் சமாளித்து நலன் பெற முடியும் .

நீர் மோர்

தேவை:

புளிக்காத கெட்டித் தயிர் – 1 கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவைக்கு
பெருங்காயத்தூள்- 1/2 சிட்டிகை
கறிவேப்பிலை கொத்துமல்லித்தழை- சிறிது

செய்முறை:
ஒரு கப் தயிரை மத்திலோ அல்லது மிக்சி வைப்பரிலோ நன்றாக கடைய வேண்டும். (மேலே நுரை இருக்குமளவு) பின் ஒரு கப் தண்ணீரை சேர்த்து மீண்டும் கடையுங்கள். பின்பு தேவையான நீர் சேர்த்து அதில்  உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மீண்டும் மத்தால் நன்கு கடைந்து அதன் மேல் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்துமல்லித்தழை தூவி குடிக்கலாம்.

மசாலா நீர் மோர்

தேவை:
கெட்டித்தயிர் - ஒரு கப் 
இஞ்சி - அரை அங்குலம் (நசுக்கியது)
சாட் மசாலா-  அரைத் தேக்கரண்டி சீரகத்தூள்- அரை தேக்கரண்டி
உப்பு -தேவைக்கு
வடித்த சாதம்- 1கரண்டி
பச்சை மிளகாய்- 1
கருப்பு உப்பு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை  கொத்துமல்லி - சிறிது
புதினா - 4 இலை
எலுமிச்சைசாறு - அரை ஸ்பூன்
தண்ணீர் - 2  கிளாஸ் அல்லது தேவைக்கு

மசாலா நீர் மோர்
மசாலா நீர் மோர்binjalsvegkitchen.com

செய்முறை:
ரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் தயிரை தண்ணீருடன் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். இப்போது இந்த தயிர் கலவையில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி, சீரகத்தூள், கருப்பு உப்பு,  நன்கு மசித்த சாதம், உப்பு, சாட் மசாலா சேர்ந்து நன்கு கலக்கவும். இதில் இறுதியில் எலுமிச்சை சாறு கலந்து கருவேப்பிலை கொத்துமல்லி புதினாவைச் சேர்க்கவும். இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைத்தும் பரிமாறலாம் அல்லது வெயிலில் சென்று விட்டு வந்து அப்படியே பருகுவதும் நல்லது. இதில் சீரகத்தூள் இஞ்சி வெந்த சாதம் போன்றவை கலந்து இருப்பதால் வெயிலுக்கு இதம் தருவதுடன் வயிறு நிறைவும் செய்யும்.

குறிப்பு- நீர் மோர் செய்முறைகளை வீட்டில் உள்ளவைகளைக் கொண்டு அவரவர் டேஸ்டில் தயாரிக்கலாம். வெள்ளரிக்காய், வெங்காயம் போன்றவைகள் மோருக்கு அதிக சுவை ஊட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com