அரிசி, பருப்புகளில் வண்டு, புழு வராமல் தடுக்கனுமா? இதையெல்லாம் செய்தால் போதும்!

அரிசி
அரிசி

நம் அன்றாட உணவுக்கு பயன்படுத்துவதில் அரிசியும், பருப்பும் அதிகம். அதிலும் குறிப்பாக பெரும்பாலானோர் ரேஷன் கடைகளில் தான் அரிசியும், பருப்பும் வாங்குவார்கள். ஏற்கனவே அவர்கள் குடோனில் வைத்து அனுப்புவதால் கட்டாயம் நீங்கள் வெயிலில் காயபோட்டுவிட்ட பிறகு தான் பயன்படுத்த வேண்டும்.

என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் கூட அதிகமானோர் வீட்டில் அரிசி, பருப்பில் வண்டு, புழு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனை பொடைத்து பயன்படுத்துவதற்குள் போதும் போதும் என ஆகிவிடும். வண்டு இருந்தால் கூட சுத்தம் செய்து விடலாம். புழு பிடித்து விட்டால் சமைப்பது அவ்வளவு எளிதல்ல. அத்தனை அரிசியும் குப்பைக்கு தான் போக வேண்டும். இது போன்ற பிரச்சனைகளை தடுக்க என்ன செய்யவேண்டும் என கவலைபடுகிறீர்களா. எளிதில் கிடைக்கும் இந்த 3 பொருட்களை வைத்தே அரிசி, பருப்பில் வண்டு பிடிப்பதை தவிர்க்க முடியும்.

வேப்பில்லை:

வேப்பில்லை
வேப்பில்லை

வேப்பிலையை உணவுப்பொருட்களை பாதுகாக்க பயன்படுத்தி கொள்ளலாம், வேப்பிலையை நிழலில் காயவைத்து, அரிசி, பருப்பு போட்டு வைத்திருக்கும் கலன்களில் வேப்பிலை சருகை போட்டு வைத்தால் தீர்வு கிடைக்கும்.

காய்ந்த மிளகாய்:

காய்ந்த மிளகாய்
காய்ந்த மிளகாய்

அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகாய் வத்தல்களை அரிசி பருப்பு உள்ள கலன்களில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராமல் இருக்கும்.

பிரியாணி இலை:

பிரியாணி இலை
பிரியாணி இலை

மணமூட்டியாகவும், சுவையூட்டியாகவும் பயன்படும் பிரிஞ்சி இலைகள் பூச்சிகளுக்கு எதிரியாக இருக்குமாம். ஆகவே வீட்டில் அரிசி, பருப்பு போன்றவற்றை சேமித்து வைக்கும் கலன்களில் 4, 5 பிரிஞ்சி இலைகளை போட்டு வைத்தால் பூச்சி மற்றும் புழு போன்றவற்றை வராமல் தடுக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com