வடிமட்டை அரிசி உப்புமாவும், முருங்கைப் பிஞ்சு ஊறுகாயும்!

அரிசி வெஜிடபிள் உப்புமா...
அரிசி வெஜிடபிள் உப்புமா...Image credit - youtube.com
Published on

வடிமட்டை அரிசி வெஜிடபிள் உப்புமா! 

தேவையான பொருட்கள்:

வடிமட்டை அரிசி - ஒரு டம்ளர்

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் -ஒரு கப்

பச்சை மிளகாய் - 3

வர மிளகாய் - மூன்று

பொடியாக நறுக்கிய வெள்ளை வெங்காயம் -ஒன்று

சின்ன வெங்காயம்- ஐந்து

பொடியாக நறுக்கிய- இஞ்சி, கருவேப்பிலை சிறிதளவு

தாளிக்க- கடுகு -1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வேர்க்கடலை தலா- 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம், எண்ணெய், உப்பு நெய் -தேவைக்கு

செய்முறை:

அரிசியை நன்றாக பொரித்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். 

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்தவுடன் வரமிளகாய் கிள்ளிப் போட்டு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயத்தூள் போட்டு பொன்னிறமானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். லேசாக வதங்கிய பின் காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி தண்ணீர் ஊற்றவும். கொதி வந்ததும் உப்பு போட்டு ரவையை தூவியபடி போட்டு கிளறி, எல்லாம் சேர்ந்து ஒன்றாக நன்றாக வெந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி கரண்டியால் நன்றாக அழுத்திவிட்டு, அதன் மீது பரவலாக நெய் ஊற்றவும். அப்படியே எடுத்து பரிமாறி விருப்பப்பட்ட சட்னியுடன் சாப்பிடவும். 

இதையும் படியுங்கள்:
ஜம்முன்னு மணக்கும் ஜவ்வாது பலன்கள் தெரியுமா?
அரிசி வெஜிடபிள் உப்புமா...

நீரிழிவுக்காரர்களுக்கு நீண்ட நேரம் பசியைத் தாங்கும்  உப்புமா இது. பொரிக்கும் பொழுதே அரிசி நன்றாக வெந்து விடுவதால் நீண்ட நேரம் வேக விட வேண்டிய அவசியம் இல்லை. ஆதலால் சட்டென்று செய்து  விடலாம்.

முருங்கை பிஞ்சு ஊறுகாய்! 

தேவையான பொருட்கள்:

முருங்கை பிஞ்சு மிகவும் பிஞ்சானது -20 

காய்ந்த மிளகாய்-25

வெந்தயம்- 2 ஸ்பூன்

கடுகு 3 ஸ்பூன், 

பெருங்காயத்தூள்- அரை ஸ்பூன்

மஞ்சள் தூள்- ஒரு டேபிள் ஸ்பூன்

புளி- நெல்லிக்காய் அளவு

வினிகர்- இரண்டு கப்

பூண்டு பல்- பத்து

கடலை எண்ணெய்- ஒன்னே கால் கப்

நல்லெண்ணெய்- மூணு டேபிள் ஸ்பூன்

உப்பு- தேவைக்கேற்ப

முருங்கை பிஞ்சு ஊறுகாய்...
முருங்கை பிஞ்சு ஊறுகாய்...Image credit - youtube.com

செய்முறை:

முருங்கை பிஞ்சை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடுகு, வெந்தயம், மிளகாய் வற்றல், எல்லாவற்றையும் வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். புளியை நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டுடன் முருங்கை பிஞ்சை சேர்த்து வதக்கி,  அவற்றை தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் புளிக் கரைசலை ஊற்றி பொடித்த விழுது, பெருங்காயத் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இது நன்றாக வதங்கியதும், வதக்கிய பூண்டு முருங்கை பிஞ்சை சேர்த்து, அடுப்பில் இருந்து இறக்கி நல்லெண்ணெய்  சேர்த்து கிளறி விடவும்.  நன்றாக ஆறவிட்டு, ஆறியதும் வினிகர் கலந்து 3 நாட்கள் ஊற விட்டு  பாட்டில்களில் எடுத்து வைக்கவும்.  பிரசவித்த பெண்கள் முதற்கொண்டு தயிர், ரசம் சாதத்துடன் சாப்பிட ருசியள்ளும் .இரும்புச் சத்தும் கிடைக்கும். இந்த ஊறுகாயின் வாசமும் ருசியும் சாதத்தில் போட்டு அப்படியே பிசைந்து சாப்பிட தூண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com