வாழைப்பூவின் நன்மைகள்:
பெண்களுக்கு வாழைப்பூ பெரும் வரப்பிரசாதம் என்றேச் சொல்லலாம். கர்ப்பப்பைக்கு வாழைப்பூ மிகவும் நல்லது. மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, அதிக உதிரப்போக்கு உண்டாகும். அப்போது அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், ரத்தப்போக்கு கட்டுப்படும்.
அதோடு, உடல் அசதி, வயிற்றுவலி குறையும். நாளடைவில் மறையும்.வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும்.இன்னும் பல நன்மைகள் உள்ளன .சிலவற்றை மட்டுமே பகிர்ந்துள்ளேன்.
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு:
தேவையான பொருள்கள்:
1.வாழைப்பூ - 1.
2.துவரம் பருப்பு - 50 கிராம்
3.பாசிபருப்பு - 50 கிராம்
4.கடலைபருப்பு - 4 ஸ்பூன்
5.காய்ந்த மிளகாய் - 1
6.கடுகு- 1/4 ஸ்பூன்
7.எண்ணெய் -தேவையான அளவு.
8.உப்பு - தேவையான அளவு
9.தேங்காய் துருவல் - 1/2 கப்
10.சோம்பு - 1 ஸ்பூன்
11.சீரகம் - 1/2 ஸ்பூன்
12.பட்டை - சிறுதுண்டு
13.இஞ்சி - 1/2 ஸ்பூன்
14.பூண்டு - 1/2 ஸ்பூன்
15. தக்காளி - 1
16.வற்றல் தூள் - 1 ஸ்பூன்
17. மல்லி தூள் - 1 ஸ்பூன்
18. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
19. சின்ன வெங்காயம் - 50 கிராம்
20. புளி - அரைநெல்லி அளவு
செய்முறை:
1.வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும் அல்லது வேக வைத்து கொள்ளவும்
2.துவரம்பருப்பு ,பாசிபருப்பு,கடலை பருப்பு மூன்றையும் 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
3.அதனுடன் வாழைப்பூ உப்பு சேர்த்து உருண்டைகளாக பிசைந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
4.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை தாளிக்கவும்.
5. பின் சிறியதாக நறுக்கிய இஞ்சி ,பூண்டு வதக்கி தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
6. தேங்காய், சீரகம்,சோம்பு,புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்
(புளியை சுத்தம் செய்து கொள்ளவும்.)
7.வற்றல் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி அரைத்த மசாலா சேர்த்து சிறுதீயில் வைத்து 3-4 நிமிடங்கள் வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
8.குழம்பு நன்கு கொதித்ததும் வேக வைத்த உருண்டைகளை சேர்க்கவும்.
9.சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரியவும் இறக்கி மல்லிதழை தூவி பரிமாறவும்.