Valentine's day ஸ்பெஷல் பார்ச்சூன் குக்கீஸ் (Fortune cookies)!

Fortune cookies
Fortune cookiestamil.newsbytesapp.com

பார்ச்சூன் குக்கிகள் பொதுவாக தேநீருடன் சேர்த்து வழங்கப்படும். இந்த குக்கீஸை உண்டு விட்டு உள்ளேயிருக்கும் ரகசிய தகவலை படித்து விட்டு அதை வைத்து கொள்வது வழக்கம். பார்ச்சூன் குக்கிகள் பொதுவாக நம்முடைய அதிர்ஷ்டம், ஞானம், விதி போன்றவற்றை குறிப்பதாக கருதுகிறார்கள். மக்கோட்டோ அகிவாரா என்பவரே 1914 ல் முதல் முதலில் பார்ச்சூன் குக்கிகளை சேன் பிரான்சிஸ்கோவில் கண்டுப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலன்டைன்ஸ் டேவிற்க்கு பார்ச்சூன் குக்கிகள் செய்து அதனுள் நீங்கள் உங்கள் அன்புக்குரியவரிடம் சொல்ல நினைக்கும் தகவலை வைத்து பரிமாறலாம்.

பார்ச்சூன் குக்கிகள் செய்ய தேவையான பொருட்கள்:

சக்கரை பவுடர்-  3 தேக்கரண்டி.

முட்டை-1  வெள்ளை கரு மட்டும்.

நெய்- 2 தேக்கரண்டி.

உப்பு- 1சிட்டிகை.

மைதா மாவு-1/4 கப்.

நிறத்திற்கு கேசரி பவுடர்- 1 சிட்டிகை.

பார்ச்சூன் குக்கி செய்முறை விளக்கம்:

ரு பெரிய பவுல் எடுத்துக் கொள்ளவும் அதில் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து அதனுடன் சக்கரை பவுடர் 3 தேக்கரண்டி சேர்க்கவும். இப்போது நன்றாக கலக்கவும். பிறகு அதில் உருக்கிய நெய்யை 2 தேக்கரண்டி சேர்க்கவும். பிறகு 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது இதனுடன் 1/4 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக கட்டி வராமல் கலக்கவும். நாம் எடுத்திருக்கும் அளவில் 10 முதல் 12 பார்ச்சூன் குக்கிகள் வரும். அதிகம் வேண்டும் என்றால் அளவை டபுள் ஆக்கிக்கொள்ளவும்.

இப்போது அதில் நிறத்திற்கு கேசரி பவுடரை சேர்க்கவும். தயாராக இருக்கும் கலவையை வைத்து விட்டு சீக்ரெட் மெசேஜை எழுதி வைக்கவும். முன்பே எழுதி வைத்துக் கொள்ளவது நல்லது.

இதையும் படியுங்கள்:
நரைமுடி பிரச்னையை தீர்க்கும் துளசி… எப்படி தெரியுமா?
Fortune cookies

இப்போது அடுப்பில் தீயை கம்மியாக வைத்துக்கொண்டு ஃபேனை வைத்து அதில் செய்து வைத்திருக்கும் மாவை ½ தேக்கரண்டி விட்டு விரல்களால் நன்றாக பரப்பிவிடவும். சிறிது நேரத்தில் ஓரங்கள் நிறம்மாற தொடங்கும். அப்போது திருப்பி போடவும். இரண்டு பக்கமும் வெந்த பிறகு நடுவிலே லெட்டர் மெசேஜை வைத்து அப்படியே இரண்டாக மடித்து ஒரு பவுலின் மேலே வைத்து சற்று அமுக்கவும். அப்போதுதான் அதனுடைய வடிவம் கிடைக்கும். சிறிது நேரத்தில் ஆறியதும் குக்கீஸ் கிரிஸ்பியாக மாறிவிடும்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குக்கீஸை உடைத்து சாப்பிட்டு விட்டு உள்ளே என்ன தகவல் இருக்கிறது என்று பார்ப்பதில் ஆர்வம் காட்டவே செய்வார்கள். காதலர் தினத்தன்று இதை உங்கள் அன்புக்குரியவருக்கு செய்து கொடுங்கள். அவ்வளவுதான் சுவையான பார்ச்சூன் குக்கீஸ் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com