சமைக்க நேரமில்லையா? சிம்பிள் சட்னிகள் போதும்!!

variety chutney
variety chutney recipes
Published on

டிபன் செய்து முடித்திருப்போம். ஆனால் அதற்கு தொட்டுக்கொள்ள அவசரத்தில் செய்ய மறந்து விடுவோம் அல்லது நேரம் இல்லாமையால் விட்டிருப்போம். இதற்கு ஈசியாக, உடனடியாக செய்ய சில சட்னி வகைகளை பார்க்கலாம். இதற்கு வறுக்க வேண்டாம், வதக்க வேண்டாம்.

அவசர சட்னி 1:

ட்லி மிளகாய்ப்பொடி இரண்டு கரண்டி எடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு வெங்காயத்தை நறுக்கி, கொட்டைப்பாக்கு அளவு புளி, சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்க உடனடி சட்னி ரெடி இதனை இட்லி தோசை பொங்கலுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

அவசர சட்னி 2:

ரெண்டு கைப்பிடி கொத்தமல்லி தழையுடன் தேவையான அளவு உப்பு, புளி, சிறிது தேங்காய் துருவல், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்ட சூப்பர் சட்னி தயார்.

அவசர சட்னி 3:

ரெண்டு தக்காளி பழத்துடன் ஒரு பச்சை மிளகாய் இரண்டு பல் பூண்டு உப்பு சேர்த்து அரைத்து கடுகு தாளித்து அதில் அரைத்ததை போட்டு ஒரு பிரட்டு பிரட்ட சூப்பரான சட்னி தயார்.

அவசர சட்னி 4:

ரெண்டு கைப்பிடி பொட்டுக்கடலை உப்பு பச்சை மிளகாய் இரண்டு புளிப்பான மோர் ஒரு கரண்டி சேர்த்து மிக்ஸியில் அரைக்க படாபட் சட்னி ரெடி.

அவசர சட்னி 5:

பெரிய துண்டு இஞ்சி 1 அத்துடன் உப்பு, கொட்டை பாக்கு அளவு புளி, ஒரு வரமிளகாய் ஒரு துண்டு வெல்லக் கட்டி சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி கடுகு தாளிக்க ஆஹா ஓஹோ என்று பாராட்டுவார்கள். இது எல்லா வகையான டிபன் ஐட்டத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் உணவில் எதைச் சேர்க்கலாம், எதைத் தவிர்க்கலாம்?
variety chutney

அவசர சட்னி 6:

ச்சை மிளகாய் 6, தேவையான அளவு உப்பு , கொட்டைப்பாக்களவு புளி, வெல்லக்கட்டி சிறு துண்டு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து கடுகு தாளித்த சட்டியில் போட்டு ஒரு பிரட்டு பிரட்ட ஸ்பைசி சட்டினி தயார்.

அவசர சட்னி 7:

மிளகாய் பழம் ஏழு எட்டு கொதிக்கும் நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்து உப்பு, புளி, வெல்லக்கட்டி சிறிது சேர்த்து அரைத்து கடுகு தாளித்து கொட்ட வெகு ஜோரான சட்னி தயார்.

அவசர சட்னி 8:

புளிப்பான மாங்காய் துண்டுகள் சிலவற்றுடன் உப்பு, பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து அழைக்க சுவையான சட்னி ரெடி.

அவசர சட்னி 9:

தேங்காய் துருவலுடன் உப்பு, நான்கு பல் பூண்டு, கொட்டை பாக்களவு புளி அல்லது மாங்காய் துண்டுகள் ரெண்டு, வர மிளகாய் இரண்டு சேர்த்து அரைத்து கடுகு தாளிக்க சட்னி தயார்.

இந்த சட்னி வகைகளை டிபனுக்கும், சூடான சாதத்தில் பிசைந்து சுட்ட அப்பளத்துடன் சாப்பிடவும் ருசியாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com