கீரையில் இத்தனை வகை சமையலா?

varieties of spinach
varieties of spinach

சில வீடுகளில் கீரை கடையல், பொரியல் என்று செய்து வைத்தால் குழந்தைகள் அதை சாப்பிடுவதற்கு விரும்ப மாட்டார்கள். அதற்குப் பதிலாக கீரையை நாம் செய்யும் பதார்த்தங்களில் சேர்த்து ருசிபட செய்து கொடுத்தால் நிமிஷத்தில் காலியாக்கி விடுவார்கள். அதனால் கீரையை எதில் எப்படி சேர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம். 

புதினா இலைகளை சுத்தம் செய்து நீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி சாட் மசாலா, கருப்பு உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு பிழிந்து ஐஸ் அல்லது பானை தண்ணீர் சேர்த்து ஜல்ஜீரா ஜூஸ் குடிக்கலாம். மாறுதலாக இருக்கும். கோடைக்கு நல்ல குளிர்ச்சி தரும். 

எந்த வகைக் கீரையும் எந்த வகை பருப்பும் சேர்த்து கூட்டு செய்யும்போது வறுத்து அரைத்த சாமானில் தேங்காய் வைக்காமல் கூட்டை அடுப்பில் இருந்து இறக்கும் சமயம் துளி தேங்காய் பால் ஊற்றி இறக்கினால் கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். 

கீரையை பருப்புடன் சேர்த்து செய்யும்போது தக்காளி, புளி சேர்க்காமல் கொஞ்சம் நெல்லிக்காயைத் துருவிப் போட்டு விட்டால் அபார ருசியாக இருக்கும்.

பாலக்கீரையை நன்கு ஆய்ந்து இலையிலேயாய் சுத்தம் செய்து கொள்ளவும். அதில் கடலை மாவு, காரப்பொடி, பெருங்காயம், உப்பு, கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து பிசறி தண்ணீர் தெளிக்காமல் எண்ணெய் காய்ந்தவுடன் உதிர்த்தார் போல் போட்டால் மொர மொர பக்கோடா ரெடி. சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். நிமிஷத்தில் தட்டு காலி ஆகும். 

அரைக்கீரை முளைக்கீரை வெந்தயக் கீரை போன்றவற்றை பொடிப் பொடியாக நறுக்கி இஞ்சி பூண்டு விழுதோடு சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, உதிர்வுதிரான சாதத்தில் கலந்தால் கீரை புலாவ் நல்ல சுவையாக இருக்கும். இதை குழந்தைகள் விரும்பி உண்பர். அனைவருக்கும் பிடிக்கும். 

எந்த வகை கீரையாக இருந்தாலும் சரி அவற்றை பொடிப்பொடியாக நறுக்கி லேசாக வதக்கி சப்பாத்தி மாவில் போட்டுப் பிசைந்து சப்பாத்தி செய்யலாம். கீரை சப்பாத்தியை அனைவரும் விரும்புவர். 

கீரை கடையல்
கீரை கடையல்samayalnalam.com

முருங்கைக் கீரையை ராகி களி, ராகி தோசை, ராகி கீரை பக்கோடா போன்றவற்றில் பொடியாக நறுக்கி கலந்து செய்யலாம். 

வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி அதனுடன் முள்ளங்கி, கேரட் துருவலை சேர்த்து கோதுமைமாவில் கலந்து பரோட்டா செய்தால் அசத்தலாக இருக்கும். 

அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை போன்றவற்றை பொடிப்பொடியாக நறுக்கி தோசை, அடை, இட்லி மாவுகளில் கலந்து சிறிது மிளகு, சீரகத்தூள் கலந்து வார்க்கலாம். பச்சை நிறம் அவைகளின் மேல் எடுப்பாகத் தெரிய சாப்பிட யாரையும் வற்புறுத்த வேண்டிய அவசியமே இருக்காது. 

முருங்கைக் கீரையை உளுத்தமாவில் கலந்து வடை செய்து கொடுத்துப் பாருங்கள். அதன் ருசியே அலாதிதான். 

திடீர் விருந்தாளிகள் வந்துவிட்டால் கோதுமைமாவில் சிறிது அரிசி மாவு கலந்து புதினா, தனியா, கொத்தமல்லி போன்றவற்றை கொடியாக நறுக்கி பச்சை மிளகாய் போட்டு பக்கோடா செய்து அசத்துங்கள். 

இதையும் படியுங்கள்:
பயண அனுபவம் - வாருங்கள் நயாகரா செல்வோம்!
varieties of spinach

வீட்டில் கற்பூரவள்ளி, வெற்றிலை, புதினா, நாரத்தை, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற இலைகள் இருக்கிறதா கவலையே வேண்டாம். அவைகளில் ஒவ்வொன்றாக பறித்து பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி போட்டுக் கொடுத்துப் பாருங்களேன் மனமும் ருசியும் அசத்தும். 

வாதநாராயணன் கீரையை முருங்கைக்கீரையுடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம். 

இப்படி கீரையை சாப்பிடும் ஐட்டங்களிலேயே வித்தியாசமாக கலந்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர். சத்துக்களும் அப்படியே உடம்பில் சேரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com