வாழைப்பழ அல்வா

வாழைப்பழ அல்வா

Published on
ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்

தேவையானவை:

பால் – ½ லிட்டர்.

வாழைப்பழம்2

சர்க்கரை 250 கிராம்.

நெய் 110 கிராம்,

ஊற வைத்து தோலுரித்த பாதாம் பருப்பு – 13.

முந்திரி பருப்பு 12,

வாழைப்பழ எஸன்ஸ் 2 டீஸ்பூன்.

செய்முறை:

வாழைப்பழத்தை தோலுரித்து, நறுக்கி பாதாம் முந்திரியுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் பாலை ஊற்றி பாதியாய் சுருங்கும்வரை கிளறிக் கொண்டிருக்கவும். பின் அரைத்து வைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் பாலுடன் நன்கு கலக்கவும். பின் சர்க்கரை நெய் சேர்த்து அல்வா பதம் வரும்வரை கிண்டவும். பிறகு எஸ்ஸன்ஸ் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும். அல்வா ரெடி.

logo
Kalki Online
kalkionline.com