Vegatables
Vegatables

கோடைக்கு இதமான காய்கறிகள் என்னென்ன பார்ப்போமா!

கோடை வறுத்தெடுக்கிறது. சுட்டெறிக்கும் வெப்பத்தால் உடம்பில் ஆங்காங்கே கட்டிகள் தோன்றுவதோடு பல வியாதிகளும் உண்டாகி தொல்லை கொடுக்கிறது. இந்த கோடைகால கொடுமைகளிலிருந்து உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள குளிர்ச்சியான காய்கறிகளை சாப்பிடுவது நல்லது . என்னென்ன காய்கறிகளை சாப்பிடலாம் என பார்ப்போம்.

1. வாழைப்பூ

Valaipoo
Valaipoo Image Credit: tamilxp

வாழைப்பூவில் ஈரப்பதம் மிகுதியாக இருப்பதோடு சுண்ணாம்பு சத்தம் அதிக அளவில் உள்ளன. இதை சமைத்து சாப்பிட்டால் மூளை குளிர்ச்சி அடையும் வயிற்றுப் புண், வாய்ப்புண் ஏற்படாமல் தடுக்கும். வாய் நாற்றம் வராது. மூல நோய்க்கு நல்ல மருந்து பெண்களுக்கு மாதவிலக்கை ஒழுங்கு செய்யும் பலவிதமான கர்ப்ப நோய்களையும் குணப்படுத்தும் சூடு மற்றும் வெள்ளை நோயும் போக்கும் தன்மை கொண்டது.

2. வாழைக்காய்

Vazhakkai
VazhakkaiImage Credit: mydukaan

இதில் ஈரப்பதம் மிகுதி. வைட்டமின் சி உள்ளது சுண்ணாம்பு சத்தம் புரோட்டீனும் அதிக அளவில் கொண்டது. உடல் சூட்டை தணிக்கும். பித்தம் தலைச்சுற்றல் ,பித்த வாந்தி, சூடடு இருமல், வாயு கோளாறு வயிற்றில் ஏற்படும் உப்புசம் போன்ற வற்றை குணப்படுத்தும்.

3. காலிபிளவர்

cauliflower
cauliflowerImage Credit: thespruce

தொண்ணூறு சதவீதம் ஈரப்பதம் கொண்டது. அதிக சத்து உள்ளது. வைட்டமின் சி மிகுதி. சூட்டை தணிக்கும். மூல சூட்டிற்கு நல்லது மூலத்தை குணப்படுத்தும் உடல் வறட்சியை போக்கும்.

4. சிவப்பு முள்ளங்கி

Red radish
Red radishImage Credit: trikaya

தண்ணீர் சத்து அதிகம். மாவு பொருள் மிகுதியாகக் கொண்டது. உடல் சூட்டை தணிக்கும். நீர் குத்தலை நீக்கும். சிறுநீர்ப்பை சுத்தமாகும். எளிதில் ஜீரணம் ஆகும். மூலநோயை தணிக்கும். பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு வெள்ளை நோய் போன்றவற்றை தடுக்கும். மூளைக்கு பலம் தரும். களைப்பு நீங்கும்.

5. வெள்ளை முள்ளங்கி

White radish
White radishImage Credit: otterfresh

தொண்ணூற்று நான்கு சதவீதம் தண்ணீர் சத்துக் கொண்டது. புரதமும் கொழுப்பும் அடங்கியது. தோல் வறட்சி நீங்கும். ரத்த மூலம் தணியும். எலும்புகளுக்கு பலம் தரும். தாகம் நீங்கும். சிறுநீர் ஒழுங்காகும் மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்து. மாதவிலக்கு நாட்களில் உண்டால் மாதவிலக்கு அதிகமாகும் உடம்பில் களைப்பு ஏற்படும் வாத உடல் காரர்கள் சாப்பிடக்கூடாது.

6. வெள்ளரிப்பிஞ்சு

Cucumber
CucumberImage Credit: florafoods

முழுக்க முழுக்க தண்ணீர் சேர்த்துக் கொண்டது. தாகம் ஏற்படாமல் தணிக்கும். தொண்டைக்கட்டு நீங்கும் இருமல் குணமாகும். சளியை வெளித்தள்ளும். காச நோயை குணப்படுத்தும். மேனி மினுமினுப்பாகும் உடம்பில் தேய்த்து குளித்தால் நிறம் மாறும் உடல் வறட்சி போக்கும். பெண்களுக்கு மாதவிலக்கு ஒழுங்காகும்.

7. கல்யாண பூசணிக்காய்

 pumpkin
pumpkinImage Credit: wikipedia

சர்க்கரை சத்தம் மாவு பொருளும் அடங்கியது தண்ணீர் சத்து அதிகம். பிஞ்சு கல்யாண பூசணிக்காய் சமைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும். சூட்டால் உடம்பு இளைத்துக் கொண்டே போவது குணப்படும் மேலும் மலக்கட்டு மூல சூடு நீங்கும்.

8. கீரைத்தண்டு

Spinach
SpinachImage Credit: freshji

ஈரப்பதம் மிகுதி புரதமும் மாவு பொருளும் அடங்கியது வைட்டமின் சி அதிகம் சூட்டை தணிக்கும் குடல் புண்ணை ஆற்றும் மலத்தை இளக்கும் மூலம் தணிக்கும் வறட்டு இருமலை தணிக்கும் பித்தம் குறைக்கும்.

9. சௌசௌகாய்

Chousou vegetable
Chousou vegetableImage Credit: JioMart

சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும். கோடையில் வெப்பத்தை தணிக்கும் நீர்ச்சத்து மிகுந்தது. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக் கொள்ளும். கோடையில் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை உண்டாக்கும்.

10. வெண்டைக்காய்

ladys finger
ladys fingerImage Credit: trustbasket

நினைவாற்றலை பெருக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும் கோடைக்கு மிகவும் நல்லது. வெண்டைக்காய் பச்சடி வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் சக்தி உண்டு. வெண்டைக்காயுடன் சர்க்கரை சேர்த்து சாறு தயாரித்து பழகினால் நீர்க்கடுப்பு எரிச்சல் இருமல் போன்றவை எளிதில் நீங்கும். வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு குளிர்ச்சியை தருவது தோல்வறட்சியை நீக்கி மேனியை பளபளப்பாகிறது.

11. சின்ன வெங்காயம்

small onion
small onionImage Credit: cococa

சின்ன வெங்காயத்தின் உடல் சூட்டை தணிக்கும் நல்ல மருந்தாக இருக்கிறது. அதிகப்படியான சூட்டினால் கண்எரிச்சல் ஏற்படும் போது சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கட்டித் தயிருடன் கலந்து காலை வேளையில் பழைய சாதத்துடன் சாப்பிட்டு வர வேண்டும். பசு மோரில் வெங்காயச்சாறு கலந்து பருகி வந்தால் சூட்டினால் ஏற்படும் வயிற்று கடுப்பு குணமாகும். ரத்தசின்ன வெங்காயம் நல்ல குளிர்ச்சியை தரும் ஒரு கோடைக்கு நல்ல தீர்வு தரும் அருமருந்து.

12. தக்காளிப்பழம்

tomato
tomatoImage Credit: amazon

கோடைகாலத்தில் தக்காளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் நாக்கு வறட்சி நீங்கும். பழுத்த தக்காளி பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து பருகி வரவேண்டும் உடல் பளபளப்பாகவும் உடலில் ஏற்படும் உஷ்ணத்தினால் ஏற்படும் கட்டிகளை வரவிடாமல் தடுக்கும்.

13. மணத்தக்காளி கீரை

Manathakkali Keerai
Manathakkali Keerai Image Credit: onezeros

மணத்தக்காளி கீரை கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து சிறுநீரை பெருக்கும் இயல்பு கொண்டது. வயிற்றுப் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி காயை பருப்புடன் சேர்த்து பயன்படுத்தலாம் இது குளிர்ச்சி கொடுக்கும் இயல்பு கொண்டது.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான 7 வகை சப்பாத்திகள்!
Vegatables

14. அறைக்கீரை

Arai Keerai
Arai KeeraiImage Credit: amazon

கோடையில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும் அற்புதக்கீரை. இது மலச்சிக்கலை குணப்படுத்தும் உடல் குளிர்ச்சி தரும். உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்தும். கண் எரிச்சலை நீக்கும். கோடைக்கு தினமும் அறைக்கீரை கடைந்து சாப்பிடலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com