வேலூர் ஸ்பெஷல் சர்க்கரை போண்டா - வீட்டில் ஈசியாக செய்யலாமே!

சர்க்கரை போண்டா
சர்க்கரை போண்டாImage credit - youtube.com

வேலூரில் மிகவும் பிரபலமான சர்க்கரை போண்டாவை சட்டுன்னு வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். நேரமும் எடுக்காது. வாங்க சர்க்கரை போண்டா எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:

சர்க்கரை-1/2 கப்.

வாழைப்பழம்-1

முட்டை-1

சோடாப்பு-1 சிட்டிகை.

கோதுமை மாவு-1கப்.

ஏலக்காய் தூள்- ¼ தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

ஒரு பவுலில் ½ கப் சர்க்கரை, 1 வாழைப்பழம், 1 முட்டை, 1 சிட்டிகை சோடாப்பு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். இப்போது இத்துடன் 1 கப் கோதுமை மாவு, ¼ தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக பிசையவும். மாவு ரொம்ப கட்டியாக இல்லாமல் கொஞ்சம் பஜ்ஜி மாவு பதத்தில் இருக்க வேண்டும். மைதா சேர்க்காமல் கோதுமை மாவில் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும்.

இப்போது அடுப்பில் எண்ணெய்யை காய வைத்து மாவை கிள்ளி சிறிது சிறிதாக போண்டா போட்டு நன்றாக வேக விடவும். மாவு நன்றாக வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும். இப்போது சுவையான இனிப்பு போண்டா தயார். மாலை ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு சூடாக செய்து கொடுக்கலாம் செம டேஸ்டியாகவும் இருக்கும். நீங்களும்  வீட்டில் ஒருமுறை முயற்சித்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com