ஸ்...ஸ்...ஸ்... எவ்ளோ டேஸ்ட்டு!

வெர்மிசிலி பால்ஸ்
வெர்மிசிலி பால்ஸ்

வெர்மிசிலி பால்ஸ்!

தேவை: நறுக்கிய வெங்காயம் - 2, கேரட், உருளைக்கிழங்கு - தலா1. பட்டாணி- ¼  கப், சோயா உருண்டை - 10, கரம் மசாலா -1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ½  டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன், சேமியா - ½ கப், கடலை மாவு - ¼ கப், புதினா, மல்லி நறுக்கியது தலா ¼ கப், எண்ணெய் -பொரிக்க, உப்பு-தேவைக்கு . முந்திரி -15.

செய்முறை: பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து, உருளைக் கிழங்கை மசிக்கவும். கேரட்டை சீவிக்கொள்ளவும். சோயா உருண்டையை வெந்நீரில் ஊறவைத்து பிழிந்து உதிர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்கறிகள், சோயா, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மிளகாய்த்தூள் போட்டுக் கிளறவும். கடைசியில் மல்லி, புதினா தூவி இறக்கவும். மசாலாவை சிறு உருண்டைகளாக்கி அதில் ஒன்றிரண்டு முந்திரியை வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
முகத்தை பளபளப்பாக்கும் Face Detox!
வெர்மிசிலி பால்ஸ்

கடலை மாவை தோசை மாவை விட நீர்க்கக் கரைத்து உருண்டைகளை நனைத்து சேமியாவில் புரட்டி எண்ணெயில் பொரிக்கவும். ஸ்வீட் சட்னி, க்ரீன் சட்னி சூப்பர் மேட்ச்! செமையான காம்பினேஷன்! சூப்பர் டேஸ்ட்!

-ஹனி பாபு சந்திரன், திருவாரூர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com