ரொம்ப ஈசியா செய்யலாம் பிரட் எக் ஸ்கிராம்பிள்ஸ்!

பிரட் எக் ஸ்கிராம்பிள்ஸ்...
பிரட் எக் ஸ்கிராம்பிள்ஸ்...cookpad.com

தேவையான பொருட்கள்:

பிரட் ஸ்லைஸ் - எட்டு

முட்டைகள் - 4

இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு

மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன்

கரம் மசாலா- அரை ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

சிறிய வெங்காயம்-5

தக்காளி -1

கருவேப்பிலை- சிறிதளவு. 

எண்ணெய் 1 ஸ்பூன்

தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு 1/4 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை கழுவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு ஸ்பூனால் நன்றாக கலக்கி கொள்ளவும். பிரட் துண்டங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
சாக்லேட் பிரியர்களா நீங்க? அப்போ ‘சாக்லேட் பாம்’ வீட்டிலேயே செஞ்சி பாருங்க!
பிரட் எக் ஸ்கிராம்பிள்ஸ்...

அடுப்பில் வாணலியை வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், தக்காளி போட்டு சில நொடிகள் வதக்கவும். அதில் மஞ்சள் தூள் கரம் மசாலா மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு ஒரு நிமிடம் பச்சை வாடை போக வதக்கவும். பின்பு முட்டையை சேர்க்கவும். சிம்மில் வைத்து கிளறவும். ஐந்து  நிமிடங்களுக்கு பிறகு பிரட் துண்டங்களை சேர்க்கவும். மூன்று நிமிடங்கள் வரை எல்லாவற்றையும் வதக்கவும். இப்போது வாணலியை இறக்கி கீழே வைத்து பரிமாறவும். சுவையான சூடான அருமையான ருசியில் பிரட் எக் ஸ்கிராம்பில்ஸ் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com