உடல் எடையைக் குறைக்கணுமா? இந்த பூண்டு சட்னிகளை ட்ரை பண்ணுங்க!
பூண்டு என்பது சுவைக்காக மட்டும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு பொருள் அல்ல. அது நம் உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்யவும், சளித்தொல்லை நீங்கப் போராடவும், நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கச் செய்யவும் உதவக் கூடியதோர் அற்புதமான பொருள். பூண்டு உபயோகித்து தயாரிக்கப் படும் 4 வகை சட்னி ரெசிபிகளை இப்போது பார்க்கலாம்.
ஸ்மோக்கி லாசன் சட்னி (Smoky Lasun Chutney): இருபது பூண்டுப் பற்களை, கடாயில் லேசாக வறுத்து, சீரகம், தனியாத்தூள், சிவப்பு மிளகாய்த் தூள் உப்பு ஆகியவை சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் கொர கொரப்பாக அரைத்து எடுத்தால் லாசன் சட்னி ரெடி. இதை ரொட்டிக்குத் தொட்டு உண்ணலாம். அரை பக்குவத்தில் வறுத்த பூண்டு தன்னிடமுள்ள, தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் குறையாமலும் குளிர் காலங்களில் உடல் உஷ்ணம் குறையாமலும் பாதுகாக்க உதவும். மிளகாயில் உள்ள கேப்ஸைசின் இரத்த ஓட்டம் சீராக உதவும்.
சிவப்பு மிளகாய்-பூண்டு சட்னி: சுடு நீரில் ஊறவைத்த சிவப்பு மிளகாய், பூண்டு, வினிகர், உப்பு, சீரகம் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து அதில் லெமன் ஜூஸ் பிழிந்தால் சிவப்பு மிளகாய்-பூண்டு சட்னி தயார். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்த்தும் உண்ணலாம். புளிப்பும் காரமும் கலந்த சுவையான சட்னி. பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் குணம் தொற்று நோய்க்கிருமிகளை எதிர்த்துப்போராட உதவும். சைனஸ் போன்ற கோளாறு உள்ளவர்களின் அசௌகரியம் உடனடியாக நீங்கும். வினிகர் இரைப்பை குடல் இயக்கப்பாதையின் ஆரோக்கியம் மேம்பட உதவும்.
நட்டி கார்லிக் சட்னி (Nutty Garlic chutney): பூண்டுப் பற்களை கோல்டன் கலர் வரும் வரை வறுத்து, ரோஸ்டட் வேர்க்கடலை பருப்பு, சிவப்பு மிளகாய்த் தூள், உப்பு, உலர்ந்த தேங்காய் துண்டுகள் ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்தெடுத்தால் எர்த்தி சுவை கொண்ட நட்டி கார்லிக் சட்னி தயார். கோல்டன் கலரில் வறுத்தெடுத்த பூண்டு தன்னிடம் உள்ள, நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் கூட்டுப்பொருளின் தன்மை குறையாமல் பாதுகாத்து உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்பட உதவி புரியும்.
குழுமையான தயிர்-புதினா-பூண்டு சட்னி: ஃபிரஷ்ஷான பூண்டுப் பற்களை, புதினா இலைகள், தயிர், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தெடுத்தால் குளுமையான, வேறுபட்ட சுவையில் ஒரு சட்னி கிடைக்கும். பச்சைப் பூண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தயிர் வயிற்றில் உள்ள நன்மை செய்யும் பாக்ட்டீரியாக்கள் செழித்து வளரவும், புதினா உடல் வீக்கங்களைக் குறைக்கவும் உதவி புரியும். கிரில்டு வெஜிடபிள்களுடன் சேர்த்து உண்ண சுவையானது.
மேற்கூறிய இந்த 4 வகை சட்னிகளை அடிக்கடி நம் உணவுடன் சேர்த்து உட்கொண்டால், நோயற்ற வாழ்வு வாழலாம்.