எடை குறையணுமா? இந்த ரெசிபிகளை டிரை பண்ணுங்க..!

Bodu weithat loss...
healthy recipes
Published on

ற்போது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்வரை உடல் பருமன் என்பது அனைவரையும் கவலைக்குள்ளாக்கும் விஷயமாக இருந்து வருகிறது பல உடற்பயிற்சிகள் அத்துடன் உணவு முறைகளில் மாற்றம் என எடை குறைப்பிற்கு பல வழிகளை முயற்சி செய்கின்றனர். இதில் உணவுக்கு முதலிடம் என்பதால் சமச்சீரான சத்துள்ள எடையை குறைக்கும் உணவுகள் ஏதாவது இருக்கிறதா என்று தேடுகின்றனர்.       

இதோ இங்கே  எடையை சீராக வைக்க உதவும் டயட் உணவு ரெசிபிகள்..
டயட் சாம்பார்:

தேவை:
சுரைக்காய் ஒரு கப்
பூசணிக்காய் - அரை கப்
சின்ன வெங்காயம் - பத்து
புளி கரைசல் - ஒரு சிறிய கப்
பூண்டு - ஏழு பற்கள்
மிளகாய் தூள் - இரண்டு டேபிள்ஸ்பூன்
கொள்ளு - ஆறு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்-  ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை - தாளிக்க


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறியதாக நறுக்கிய சுரைக்காய் பூசணிக்காய்களை போட்டு கரைத்து வடிகட்டிய புளிக்கரைசலை ஊற்றி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தேவையான நீர் ஊற்றி வேக விடவும். ஓரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி உரித்த சின்ன வெங்காயம்,  நசுக்கிய பூண்டு போட்டு தாளித்து கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாருடன் சேர்க்கவும். காய்கறிகள் வெந்ததும் வேகவைத்து எடுத்த கொள்ளை அதிலுள்ள  தண்ணீருடன் சற்று மசித்து  ஊற்றவும். சாம்பார் ஓரிரு கொதிகள் வந்ததும் ஓரு கரண்டி வைத்து தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்த்து இறக்கவும். சுரைக்காய் பூசணிக்காய் கொள்ளு இந்த மூன்றும் உடல் எடையை குறைக்கும் தன்மை உடையவை என்பதால் இது டயட் சாம்பார் ஆகிறது. இந்த சாம்பாரை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் டேஸ்டும் சூப்பராக இருக்கும்.

கோதுமை காரப்புட்டு:

தேவை:
கோதுமை மாவு - ஒரு கப்
பச்சை மிளகாய் - இரண்டு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - இரண்டு டீஸ்பூன் கருவேப்பிலை-  சிறிது
கடுகு - சிறிது
முந்திரி- ஆறு
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - இரண்டு ஸ்பூன்
கடலைப்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:

சலித்த கோதுமைமாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி  உப்பு மஞ்சள் தூளை கால் கப் இளம் சூடான தண்ணீரில் சேர்த்து அதில் தெளித்துப் பிசிறி நன்கு கலக்கவும். அந்த மாவை அப்படியே ஒரு மெல்லிய துணியில் மூட்டையாக கட்டி சில நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும் . பிறகு அதை எடுத்து  ஒரு அகலமான தட்டில் கொட்டி கட்டிகள் இல்லாமல் உதிர்த்து  கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு  கடலைப்பருப்பு, உடைத்த முந்திரி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும். பிறகு தேங்காய் துருவல் எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலந்து மேலே நறுக்கிய கொத்தமல்லித்தழை தலை சேர்த்து பரிமாறலாம். இந்த கோதுமை காரப்புட்டு வித்தியாசமாக இருக்கும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது என்பதால் இரவு நேர டிபன் ஆகவும் இதை எடுத்துக் கொள்ளலாம் இதுவும் டயட்டுக்கு உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com