

உலகம் முழுவதும் மக்கள் சுவைக்காகவும், கலாச்சார வழக்கத்தின் காரணமாகவும் பல வினோதமான உணவுக் கலவைகளை முயற்சி செய்கிறார்கள். பல்வேறு கலாச்சாரங்களில், சில உணவுகள் வினோதமான மற்றும் வித்தியாசமான சுவை கலவைகளுடன் தயாரிக்கப் படுகின்றன. பிரபலமான வினோத உணவு கலவைகள் சிலவற்றை பார்ப்போமா
இந்தியாவில் வினோதமான உணவு கலவைகள்:
வெண்ணிலா ஐஸ்கிரீம் மற்றும் சோயா சாஸ்:
இனிப்பு பிரியர்களிடையே இப்போது மிகவும் பிரபலமாகி வரும் சுவை இது. வெண்ணிலா ஐஸ்கிரீம் சோயா சாஸால் மூடப்பட்டு தனித்துவமான சுவையுடன் விளங்குகிறது.
பிரெஞ்சு ஃப்ரையுடன் ஐஸ்கிரீம்:
பொதுவாக பிரெஞ்சு ஃப்ரையை கெட்ச்அப் அல்லது ஏதேனும் சாஸில் தோய்த்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் இப்பொழுது ஐஸ்கிரீமுடன் சேர்த்து சுவைத்து மகிழ்கின்றனர். சூடான, உப்புத்தன்மை கொண்ட பிரெஞ்சு ஃப்ரையை வெண்ணிலா ஐஸ்கிரீமில் நனைத்து சாப்பிடுவது.
மேகி பரோட்டா:
மேகி நூடுல்ஸை பரோட்டாவுக்குள் வைத்து சமைக்கப்படும் புதிய வகை உணவு.
மேகி மில்க் ஷேக்:
மேகி நூடுல்ஸை பாலுடன் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு வினோதமான பானம்.
சாக்லேட் தோசை:
தோசையின் மீது சாக்லேட் பரப்பி, உலர்ந்த பழங்களுடன் பரிமாறப்படும் வினோதமான கலவை மக்களால் மிகவும் ரசித்து உண்ணப்படுகிறது.
கருப்பு பர்கர்:
டெல்லியில் கிடைக்கும் கருப்பு நிற பன் கொண்ட பர்கர் இது.
இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் தேன்:
தேன் தெளிக்கப்பட்ட உருளைக்கிழங்கு வறுவல்.
சமோசா கண்டென்ஸ்டு மில்க்:
காரமான சமோசாவுடன் இனிப்பான பால் கலவை (condensed milk) சேர்த்து சாப்பிடும் பழக்கம் சில இடங்களில் உள்ளது.
பாஸ்தா சாஸுடன் வாஃபிள்ஸ்:
வாஃபிள்ஸ் மீது சாக்லேட் சாஸ் மட்டுமல்ல, பாஸ்தா சாஸும் பலரால் விரும்பப்படும் விசித்திரமான கலவையாகும்.
பாப்கார்னுடன் கெட்ச் அப்:
சாக்லேட் தூவப்பட்ட பாப்கார்ன் கலவையுடன் முடிந்து விடவில்லை நம் ரசனை. பாப்கார்ன் மீது கெட்ச்அப் ஊற்றப்பட்டு அந்த விசித்திரமான கலவையை சிலர் மிகவும் விரும்புகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளதா?
பாலுடன் சீட்டோஸ்:
இப்போது மிகவும் பிரபலமாகி வரும் காலை உணவு இந்த சீஸ் கலந்த தின்பண்டங்கள் இனிப்பான பாலில் சேர்க்கப்பட்டு விசித்திரமான கலவையில் ருசிக்கப்படுகிறது. அதாவது மொறுமொறுப்பான சீட்டோஸ் பாலில் ஊற வைத்து சாப்பிடப்படுகிறது.
பானி பூரி மற்றும் ஓட்கா:
பாரம்பரிய பானிபூரி நீரில் ஓட்கா கலந்து பார்ட்டிகளில் பரிமாறப்படுகிறது.
வெள்ளரி மற்றும் தேங்காய் சக்கரை: நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரியுடன் தேங்காய் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது ஒரு வித்தியாசமான சுவையைத் தருவதால் விரும்பி சாப்பிடப்படுகிறது.
ஸ்ட்ராபெர்ரி கருப்பு மிளகு:
ஸ்ட்ராபெர்ரியின் இனிப்புடன் மிளகின் காரம் சேரும்போது அதன் சுவை இன்னும் அதிகமாகிறது.
இதே போல்தான் ஆப்பிள் துண்டுகளில் சிறிது உப்பு தூவி சாப்பிடுவது அதன் இனிப்பை தூக்கி காட்டுகிறது.
ஆயுர்வேதத்தின்படி சில உணவுகள் உதாரணத்திற்கு பால்+பழங்கள் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும் என்பதால் இந்த வினோதமான சேர்க்கைகளை முயற்சிக்கும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.