மிக்ஸியில் இதையெல்லாம் போட்டு அரைத்தால் அவ்வளவுதான்..!

மிக்ஸியில் இதையெல்லாம் போட்டு அரைத்தால் அவ்வளவுதான்..!
Published on

மையல் இல்லை என்றால் எதுவுமே இல்லை.. ஏனென்றால் நாம் வாழ்வதே சாப்பாடுக்காக தான். உணவு, தண்ணீர் இன்றி நம்மால் வாழவே இயலாது. அப்படிப்பட்ட உணவை சமைப்பதே ஒரு பெரிய கலை தான். முந்தைய காலத்தில் அனைத்துமே கடினமாகவே இருந்தது. ஒரு சாப்பாடு செய்வதற்குள் போதும் போதும் என்றே ஆகியது. அம்மிக்கல்லில் அரைத்து அடுப்பை தீமூட்டி என சமையல் செய்வதே ஒரு வேலையாக இருந்தது.

ஆனால் தற்போது அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது. அனைத்து வேலைகளையும் எளிதாக்க கேஸ் அடுப்பு, மிக்ஸி என நவீன இயந்திரங்கள் வந்துவிட்டது. அப்படிப்பட்ட மிக்ஸி எளிதில் டேமேஜாகமல் இருக்க நாம் செய்ய வேண்டும் தெரியுமா. சில பொருட்களை அதில் போட்டு அரைத்தால் மிக்ஸி ஜார் எளிதில் காலியாகிவிடும். அது என்ன என்பதை பார்க்கலாம்.

பலர் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் பிளெண்டரை மாவு பிசைய பயன்படுத்துகின்றனர். ஆனால் நீங்கள் ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள். ஏனென்றால் பிளெண்டரில் கொடுக்கப்பட்டுள்ளாள் பிளேடுகள் மாவு பிசையும் நோக்கத்திக்காக டிசைன் செய்யப்படவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பிளெண்டர் ஜாரில் நீங்கள் எப்போதும் சூடான பொருள்களைப் போட்டு அரைக்கக்கூடாது. நீங்கள் இறுக்கமாக மூடி அரைக்கும் போது சூடான பொருள்களால் வெளியேறும் நீராவி உங்களது பிளெண்டர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். எனவே சட்னிக்கு வெங்காயம், தக்காளி போன்ற பொருள்களை வதக்கி அரைக்கும் போதும், கிரேவிகளை மென்மையாக்க முயற்சித்தாலும் அவற்றை கொஞ்சம் நேரம் ஆறவைத்து பின் பிளெண்டரில் போட்டு பயன்படுத்தவும்.

வாசனை நிறைந்த உணவுகள்: சைவம், அசைவ உணவுகள் என எது சமைத்தாலும் வெங்காயம், பூண்டு,இஞ்சி போன்றவற்றைக் கண்டிப்பாக அரைத்து உபயோகிப்போம். ஆனால் பிளெண்டரில் இதை அரைக்கக்கூடாது. ஏனென்றால் இந்த வாசனை நிறைந்த உணவுப்பொருள்களின் மணம் எப்போதும் பிளெண்டர் ஜாரை விட்டு போகாது. இதனால் நீங்கள் அடுத்தடுத்து வேறு உணவுகளை பிளெண்டர் பயன்படுத்தி தயாரிக்கும் போதும் கூட, முன்பு பயன்படுத்திய வலுவான வாசனை நிறைந்த பொருட்களின் மணம் அதில கலக்க கூடும்.

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு என்பது அனைவருக்கும் பிடித்தமான உணவுப்பொருள்களில் ஒன்றாக உள்ளது. ப்ரை, வேக வைத்து, பொரியல் என பலவழிகளில் சமைத்து சாப்பிட முடியும். அதே சமயம் மிக்ஸியில் பயன்படுத்துவது அதன் நிலையை மோசமாக்கிவிடும். மிக்ஸியில் நீங்கள் உருளைக்கிழங்கை அரைக்கும் போது அதிலுள்ள மாவுச்சத்துக்கள் அதிகளவில் வெளியேறிவிடும். இதனால் நீங்கள் சாப்பிடும் போது வாயில் பசை போன்று ஒட்டிக்கொள்ளும் நிலை ஏற்படும்.

காபி பீன்ஸ்: காபி கொட்டைகளை பிளெண்டரில் நீங்கள் ஒருபோதும் அரைக்கக்கூடாது. ஒருவேளை நீங்கள் அப்படி அரைக்கும் போது கொட்டைகள் மிக்ஸி பிளேடுகளில் சிக்கிக்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும். தவிர காபியின் டேஸ்ட் மற்றும் ஃப்ளேவரும் மாறி விடுகிறது. எனவே காபி கொட்டைகளை பிளெண்டரில் அரைப்பதை தவிர்ப்பது நல்லது.

உறைந்த உணவுகள் (Frozen foods): ப்ளூபெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள், சில காய்கறிகள் போன்றவற்றை நீங்கள் பிளெண்டரில் போட்டு அரைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை கடினமாக உணவுப்பொருள்கள் என்பதால் பிளெண்டரின் பிளேடு உடையக்கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com