
பொதுவாகவே பீட்ரூட் இரத்தத்தின் அளவை அதிகப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பது நாம் அறிந்த ஒரு விஷயம். அதிலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பீட்ரூட் (beetroot) சாப்பிடுவதால் இன்னும் பலவிதமான நன்மைகள் உண்டு. அது என்ன என்பதைப் பார்க்கலாம்.
* பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு அருமருந்து.
* கர்ப்பிணிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதால், குழந்தையின் முதுகெலும்பு நன்கு வளர்ச்சியடையும்.
* கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பீட்ரூட் அவசியமானது.
* தாய் மற்றும் சேய்க்கு இரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
* ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
* கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கிறது.
* இரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.
* குழந்தைக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.