சாதத்தை ஸ்கிப் செய்தால் என்ன நடக்கும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
Editor 1

சாதத்தை ஸ்கிப் செய்தால் என்ன நடக்கும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Nutritionist Priya ParmaIs it healthy to consume rice?தமிழகத்தில், அதுவும் குறிப்பாக கிராமத்தில் உள்ளவர்களை கேட்டால் போதும் அரிசி சாதத்திற்கு இணையாக வேறு எந்த உணவையும் சொல்லமாட்டார்கள். அரிசியை தாண்டி நவதானியங்களை சாப்பிடுவதை வழக்கமாக கொள்வார்கள். நகர வாழ்க்கையில் தான் அரிசி என்பதை பலரும் மறந்து வருகின்றனர். அப்படி ஒரு மாதத்திற்கு நீங்கள் அரிசி உணவை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி வல்லுநர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பார்க்கலாம்.

ஆசியாவில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அரிசி உணவை சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும் என்ற அளவிற்கு அரிசி நம் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அரிசியில் அதிகளவு கார்போஹட்ரேட் உள்ளதால், அரிசி சாதம் உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானது தானா என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

“ஒரு மாதம் வரை அரிசி உணவை நீங்கள் உட்கொள்ளாமல் இருக்கும்போது, உடலில் கலோரிகள் குறைவதன் காரணமாக உடல் எடை குறைய வாய்ப்பு உண்டு. மேலும் கார்போஹைட்ரேடுகள் உட்கொள்ளாத காரணத்தினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்” என பாலாஜி ஆக்சன் மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்டின் தலைமை ஊட்டச்சத்து நிபுணரான பிரியா பர்மா தெரிவித்துள்ளார்.

Editor 1

ஒர்க் ஹார்ட் மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொரு வல்லுனரான ரியா தேசாய் கூறுகையில், ஒரு மாதத்திற்கு அரிசி உணவை உட்கொள்ளாமல் இருக்கும்போது கண்டிப்பாக அது உடல் எடை குறைவதற்கு வழிவகுக்கும். ஆனால் அரிசிக்கு பதிலாக வேறு ஏதேனும் தானியங்களையோ அல்லது அதே அளவு கலோரிகளை தரும் வேறு ஏதேனும் கார்போஹைட்ரேடுகள் நிறைந்த உணவுப் பொருட்களையும் நீங்கள் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். “அரிசி உணவை தவிர்ப்பது என்பது கண்டிப்பாக ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சமநிலையில் வைக்க உதவும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயத்தில் “நீங்கள் அரிசி உணவை கைவிட்ட அந்த மாதத்தில் மட்டுமே ரத்தத்தில் சர்க்கரை அளவானது குறைந்திருக்கும் எனவும் அல்லது மீண்டும் அரிசி உணவை எடுத்துக் கொள்ள ஆரம்பித்ததில் இருந்து குளுக்கோஸ் அளவு அதிகரிக்க துவங்கும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறிய அளவிலான அரிசி உணவை உட்கொள்வது எந்த விதத்திலும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்தமாக அரிசி உணவை உணவு பட்டியலில் இருந்து நீக்குவது என்பது நல்ல அணுகுமுறை அல்ல என்று தேசாய் குறிப்பிட்டுள்ளார். அரிசி உணவுடன் புரதச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களையும், காய்கறிகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் அரிசி உணவை மிகவும் சத்து மிகுந்த உணவாக நம்மால் மாற்ற முடியும். அரிசியில் உள்ள கார்போஹைடிரேட்டுகள் தான் உடலின் சக்திக்கு அடிப்படையானவை. எனவே அவற்றை முற்றிலுமாக உணவு பட்டியலில் இருந்து நீக்குவது என்பது நம்மை பலவீனம் அடையச் செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த செயல்முறை தசைகள் வலுவிழிப்பதற்கும் உடலில் அதிக அளவிலான ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலில் அதிக அளவில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைப்பது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர தசைகளை குறைப்பது நோக்கமாக இருக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com