தேவை:
கோதுமை மாவு 2கப், கெட்டியாகப் பிழிந்த தேங்காய்ப் பால் 1 கப், மிளகுத்தூள் சிறிது, உப்பு, நெய் தேவைக்கேற்ப.
செய்முறை:
கோதுமை மாவை லேசாக வறுத்து, உப்பு, மிளகுத்தூள், தேங்காய்ப் பால் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சற்று நேரம் கழித்து பணியாரச் சட்டியில் நெய் விட்டு கரண்டியால் மொண்டு விட்டு ஒரு புறம் வெந்து உப்பி வந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு, வேக வைத்து எடுக்கவும். சுவையான கோதுமை பணியாரம் ரெடி.