சூப்பர் டேஸ்ட்டில் தயிர் இட்லி சாட்!

தயிர் இட்லி சாட்
தயிர் இட்லி சாட்www.youtube.com

பானி பூரி தெரியும், பேல் பூரி தெரியும். தயிர் இட்லி சாட் தெரியுமா? குழந்தைகளுக்கு அன்றாடம் ஸ்நாக்ஸ் தருவதில் பெற்றோர்களுக்கு என்றுமே குழப்பம்தான். எதை தரலாம்? அதில் சத்து இருக்கிறதா? பிடிக்குமா? பிடிக்காதா? என்றெல்லாம் தீர்மானித்து தருவதற்குள் குழந்தைகள் சாப்பிடாமலே விளையாட ஆரம்பித்து விடுவார்கள். அப்படி இல்லாமல் இந்த தயிரா இட்லி சாட்டை தந்து பாருங்கள். வேலையும் எளிது. குழந்தையும் அடம் பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:
கெட்டித் தயிர் -ஒரு கப்
சாட் மசாலா - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சீரகத்தூள் தலா கால் டீஸ்பூன்
முளை கட்டிய பயிறு (ஏதாவது ஒன்று) 3 டேபிள் ஸ்பூன்
கேரட் துருவல் ,பீட்ரூட் துருவல்- தலா ஒரு சிறிய கப் 
ஓமப்பொடி - சிறிது (இருந்தால்)
உப்பு -தேவையான அளவு
மினி இட்லிகள் - 20  (அல்லது)
4 பெரிய இட்லிகளை சதுரமாக கட் செய்தும் போடலாம்.

செய்முறை:
கெட்டித் தயிருடன் சாட் மசாலா, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து கொண்டு ஒரு அகலமான பேஸினில் இட்டிலிகளை பரப்பி அதன் மேல் முளைகட்டிய பாசிப்பயறு  பரப்பி அதன் மேல் கலந்த கெட்டி தயிர்க்கலவையை ஊற்றி, புளிப்பு சட்னி உடன் கேரட், பீட்ருட் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.

இதையும் படியுங்கள்:
பத்துவா கீரையிலுள்ள ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு தெரியுமா?
தயிர் இட்லி சாட்

அவரவர் விருப்பத்துக்கு தகுந்த மாதிரி இதில்  குழந்தைக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்து சேர்த்து தரலாம். இதில் உள்ள சீரகத்தூள், சாட் மசாலாவின் மணம் குழந்தைகளை நிச்சயம் இதைச் சாப்பிடத் தூண்டும். விருப்பப்பட்டால் மாதுளை திராட்சை போன்ற பழங்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். சத்தான ஸ்நாக்ஸ் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com