அற்புத சத்துமிக்க பாலக்கீரை கட்லெட் செய்யலாம் வாங்க!

பாலக்கீரை கட்லெட்
பாலக்கீரை கட்லெட்Image cedit - youtube.com

-வி. லஷ்மி

பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பார்க்கலாம். பாலக்கீரையில் விட்டமின் கே அதிக அளவில் உள்ளது. எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக்க உதவுகிறது. இக்கீரை ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதால் நோய் வராமல் தடுக்கிறது. தினம் ஒரு கைப்பிடி பாலக்கீரை சாப்பிட்டால் நம் உடம்பில் உள்ள பத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்:

பாலக்கீரை- இரண்டு கட்டு

உருளைக் கிழங்கு. 2

பச்சை மிளகாய். -3

இஞ்சி -1 துண்டு

 பிரட் ஸ்லைஸ்.2 

சீஸ்  துருவல்  -2

மைதா மாவு -இரண்டு கப்

பிரட் தூள் . இரண்டு கப்

உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை;

முதலில் பாலக்கீரை கட்லெட் செய்வதற்கு இஞ்சி பச்சை மிளகாய் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மூன்று கப் நீரை ஊற்றி கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் நன்கு கழுவி கீரையை போட்டு இரண்டு நிமிடம் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து வேகவைத்துக் கொள்ளவும். 

அதன் பிறகு கீரையில் உள்ள நீரை வடிகட்டி விட்டு கீரையை நன்கு அரைத்து எடுக்கவும். பிறகு பிரட் ஸ்லைசை தண்ணீரில்  நனைத்து பிழிந்து பிரட்டை தனியாக எடுத்துக் கொள்ளவும். கீரை விழுதுகளுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை போட்டு உப்பு சேர்த்து இஞ்சி மிளகாய் விழுது பிரட் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

சிறிது சிறிதாக உருண்டை பிடித்து வடை வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். பிறகு எண்ணெய் காய்ந்தவுடன் தட்டிய பாலக்கீரை கட்லெட்களை ஒவ்வொன்றாக போட்டு மூன்று அல்லது ஐந்து நிமிடம் வரை வேகவைத்து கொள்ளவும். 

சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த கட்லெட். குழந்தைகளுக்கும் ஒரு சத்தான ஈவினிங்  ஸ்நேக்ஸ் கொடுத்த மாதிரி ஆகவும் இருக்கும். ரொம்ப சுவையாக இருக்கக்கூடியது இந்த பாலக்கீரை ரெசிபி. ட்ரை பண்ணிப் பாருங்க!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com