ஆரோக்கியமான ‘பருத்திபால் கருப்பட்டி அல்வா’ செய்யலாம் வாங்க!

கருப்பட்டி அல்வா...
கருப்பட்டி அல்வா...Image credit - youtube.com

ருத்திப்பால் இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும். சிலருக்கு பசும்பால் ஒத்துக்கொள்ளாது, அவர்கள் பசும்பாலுக்கு பதில் பருத்திப்பாலை பயன் படுத்தலாம். பருத்திப்பாலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால், நரம்பு சம்பந்தமான பிரச்சனை, ரத்த அழுத்த பிரச்சனை, வயிற்று அல்சர் பிரச்சனை போன்றவற்றை குணமாக்கும். இத்தகைய நல்ல குணங்களை கொண்ட பருத்திப்பாலை கொண்டு செய்யப்படும் அல்வாவை வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

பருத்தி விதை - 2கப்.

கோதுமை ரவா-1/4 கப்.

முந்திரி-10.

பிஸ்தா-10.

கருப்பட்டி-1 கப்.

நாட்டுச்சக்கரை-1/2 கப்.

ஏலக்காய்தூள்-1/2 தேக்கரண்டி.

நெய்-1/2 கப்.

முந்திரி, பிஸ்தா-தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

ஒரு பவுலில் 2 கப் பருத்தி விதை எடுத்து அதை 4 முறை நன்றாக கழுவிய பிறகு பருத்தி விதை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 7 மணி நேம் நன்றாக ஊற வைத்து விடவும்.

கோதுமை ரவா ¼  கப்பில் தண்ணீர் ஊற்றி அதையும் ஊற வைத்துக்கொள்ளவும். இன்னொரு பவுலில் பாதாம் 10, முந்திரி 10 தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.

இப்போது பருத்தி விதையை மிக்ஸியில் போட்டு அரைத்து 4 கப் பருத்திப்பால் வருவது போல எடுத்து வைத்துக் கொள்ளவும். கோதுமை பால்  1கப் வர அளவு எடுத்துக்கொள்ளவும். முந்திரி, பாதாமை பேஸ்ட் போல தனியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
அணிவதற்கு சுகமான மொடால் ரக ஆடைகள் பற்றித் தெரியுமா?
கருப்பட்டி அல்வா...

ஒரு பாத்திரத்தில் 1 கப் தட்டின கருப்பட்டியும், ½ கப் நாட்டுச்சக்கரையும் எடுத்துக்கொண்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைய வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கிண்டவும். பால் கொதித்து வரும் நேரத்தில், கோதுமை பால், நட்ஸ் அரைத்தது சேர்த்து நன்றாக கிளறவும். கொஞ்சம் நேரத்தில் கெட்டியாக ஆரம்பித்துவிடும். இப்போது கருப்பட்டி பாகையும் ஊற்றி நன்றாக கிளறவும். நன்றாக கட்டியாக தொடங்கும் போது ½ தேக்கரண்டி ஏலக்காய் தூள், நெய் 1/2கப் சேர்த்து கிளறவும். கடைசியாக முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கிண்டவும், அல்வா பதத்திற்கு வந்ததும் இன்னொரு பாத்திரத்தில் மாற்றி விடவும். இப்போது சுவையான பருத்திப்பால் கருப்பட்டி அல்வா தயார். இது உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமில்லாமல், சுவையும் நன்றாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com