ஆரோக்கியமான ‘பிங்க் க்ளோ ஸ்மூத்தி’ மற்றும் ‘சப்போட்டா டேட் ஸ்மூத்தி’ செய்யலாம் வாங்க!

Pink glow smoothie
Pink glow smoothie and chikoo fruit with date smoothie recipesImage credits: Koolatron

‘ஸ்மூத்திஸ்’ என்னும் கான்செப்ட் முதல் முதலில் 1930ல் பிரேசிலில் தோன்றியது. அவர்களே தூய்மையான பழத்திலிருந்து ஸ்மூத்திஸை உருவாக்கினர். பிளன்டரும், ஸ்மூத்திஸூம் இணைபிரிக்க முடியாதவை. பிளென்டர் உருவான பிறகே ஸ்மூத்தீஸ் பிரபலமானது என்று சொல்லலாம். ஸ்மூத்திஸ் என்ற பெயர் வந்ததற்கு காரணம், இது மிகவும் கிரீமியாக இருப்பதால்தான். மக்கள் தங்களுக்கு பிடித்த காய்கறிகள், பழங்கள், புரோட்டின் பவுடர், விட்டமின் போன்றவைகளை சேர்த்து அவர்களே சொந்தமாக ஸ்மூத்திஸ் செய்ய தொடங்கி விட்டனர். தினமும் ஸ்மூத்திஸ் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. சருமத்தையும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்கிறது. அத்தகைய ஸ்மூத்தி ரெசிபியை வீட்டிலே சுலபமாக செய்யறது எப்படின்னு பாக்கலாம் வாங்க.

பிங்க் க்ளோ ஸ்மூத்தீஸ் செய்ய தேவையான பொருள்;

Frozen ஸ்ட்ராப்பெரி-1கப்.

வாழைப்பழம்-1

மாதுளைப்பழ சுளை-1கப்.

பம்க்கீன் விதைகள்-1 தேக்கரண்டி.

பீட்ரூட் சிறிதாக நறுகியது-1 கப்.

தேன்-1 தேக்கரண்டி.

பாதாம் பால்-1கப்

பிங்க் க்ளோ ஸ்மூத்தீஸ் செய்முறை விளக்கம்.

ப்ரீசரில் வைத்து நன்றாக கெட்டியான ஸ்ட்ராபெரி பழங்கள் 1 கப், சிறிதாக நறுக்கிய வாழைப்பழம் 1, மாதுளை பழ முத்துகள் 1 கப், பம்க்கீன் விதை 1 தேக்கரண்டி, பீட்ரூட் சிறிதாக நறுக்கியது 1 கப், தேன் 1 தேக்கரண்டி, பாதாம் பால் 1 கப் சேர்த்து நன்றாக அரைத்து கண்ணாடி தம்ளரில் ஊற்றி மேலே புதினா இலை வைத்து பரிமாறவும். மிகவும் ஆரோக்கியமான ஸ்மூத்தி மட்டுமில்லாமல் சருமத்திற்கும் பொலிவு தரும். நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

சப்போட்டா டேட் ஸ்மூத்தி செய்ய தேவையான பொருட்கள்;

சப்போட்டா-3

பேரிச்சம்பழம்-2

வாழைப்பழம்-1

ஓட்ஸ்-1/4 கப்.

வெண்ணிலா எசென்ஸ்-1 தேக்கரண்டி.

பால்-1கப்.

தேன்-1 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
இரவில் சீக்கிரமே சாப்பிடச் சொல்கிறார்களே, ஏன் தெரியுமா?
Pink glow smoothie

சப்போட்டா டேட் ஸ்மூத்தி செய்முறை விளக்கம்;

முதலில் மிக்ஸியில் விதை நீக்கப்பட்ட 3 சப்போட்டாவை சிறிதாக வெட்டி போட்டுக்கொள்ளவும். பேரிச்சம்பழம் இரவு ஊறவைத்து எடுத்தது 2 சேர்த்து கொள்ளவும். இத்துடன் வாழைப்பழம் 1, ஓட்ஸ் ¼ கப், பால் 1கப், வெண்ணிலா எசென்ஸ் 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைத்து கிளேஸ் டம்ளரில் ஊற்றி பரிமாறவும். இந்த ஸ்மூத்தி சுவையாக மட்டுமில்லாமல் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். நீங்களும் ஒருமுறை வீட்டில் இதை முயற்சித்து பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com