வெயிலுக்கு ஜில்லுன்னு கஸ்டர்ட் ஃப்ரூட் மிக்ஸர் நட்ஸ் செய்யலாம் வாங்க!

கஸ்டர்ட் ஃப்ரூட் மிக்ஸர்
கஸ்டர்ட் ஃப்ரூட் மிக்ஸர்www.youtube.com

கோடை வெயில் ஆரம்பித்து கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் பஜ்ஜி, பகோடான்னு செய்ய முடியாது. ஏதாவது ஜில்லுன்னு செய்யணும், அதே சமயம் உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கணும்னு நினைப்பவர்களுக்காகத்தான் இந்த கஸ்டர்ட் ஃப்ரூட் மிக்ஸர் நட்ஸ் ரெசிபி. ஒரு தடவை செஞ்சிட்டீங்கன்னா, சம்மர் முடியும் வரை விடவே மாட்டீங்க. சரி வாங்க, கஸ்டர்ட் ஃப்ரூட் மிக்ஸர் நட்ஸ் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

கஸ்டர்ட் ஃப்ரூட் மிக்ஸர் நட்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

பால்- 1 லிட்டர்.

சியா விதைகள்-  தேவையான அளவு.

ஆப்பிள்-1கப்.

அன்னாசி-1கப்.

மாதுளை-1கப்.

திராட்சை-1கப்.

பொடியாக நறுக்கிய பாதம்- தேவையான அளவு.

கஸ்டர்ட் பவுடர்- 4 தேக்கரண்டி.

சக்கரை-2 தேக்கரண்டி.

கஸ்டர்ட் ப்ரூட் மிக்ஸர் நட்ஸ் செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை எடுத்து நன்றாக சுண்ட காய்ச்சவும். அதற்குள் ஒரு குட்டி பவுலில் சியா விதைகளை தேவையான அளவு போட்டு அதில் தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். பிறகு இன்னொரு குட்டி பவுலில் கஸ்டர்ட் பவுடர் 4 ஸ்பூன் எடுத்து அத்துடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆப்பிள் 1 கப், அன்னாசி 1 கப், மாதுளை 1கப், திராட்சை 1 கப் ஆகியவற்றை சிறியதாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
ஓ மணப்பெண்ணே! இதையெல்லாம் கவனி 6 மாதங்களுக்கு முன்னே!
கஸ்டர்ட் ஃப்ரூட் மிக்ஸர்

இப்போது சுண்டிய பாலில் 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து அத்துடன் செய்து வைத்திருக்கும் கஸ்டர்ட் பவுடர் கரைசலை சேர்த்து பால் நன்றாக கட்டியாகும் வரை கிளறி இறக்கி விடவும். இப்போது பாலை வேறு பவுலில் மாற்றி நன்றாக ஆற விடவும்.

பிறகு ஆறிய பாலுடன் வெட்டி வைத்திருக்கும் பழங்களான ஆப்பிள், அன்னாசி, மாதுளை, திராட்சை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் ஊற வைத்திருக்கும் சியா விதைகளையும் சேர்க்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய பாதாமை தூவி விட்டு நன்றாக கிண்டவும். இப்போது இதை அப்படியே ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து எடுக்கவும். இப்போது தயாராக இருக்கும் கஸ்டர்ட் ஃப்ரூட் மிக்ஸர் நட்ஸை கண்ணாடி தம்ளரில் ஊற்றி பரிமாறவும். வீட்டிலேயே செஞ்சு பாருங்க, ஆரோக்கியமாகவும் இருக்கும், கோடை வெயிலுக்கு ஜில்லுன்னு சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com