குட்டிக் குட்டி ரெட் கப் கேக்குகளை வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

ரெட் கப் கேக்
ரெட் கப் கேக்

ப்கேக் எப்படி உருவானது என்று தெரியுமா? 1796 அமிலியா சைமன்ஸ் என்பவரே கப் கேக்குக்கான ரெசிபியை ‘சின்ன கப்களில் பேக் செய்யப்படும் கேக்’ என்று அவருடைய புத்தகமான அமெரிக்கன் குக்கரியில் எழுதி வைத்திருந்தார். கப்கேக்குகள் அதன் அழகான, வசீகரமான தோற்றத்திற்கு பெயர் போனது. குழந்தைகள் மிகவும் ரசித்து உண்ணக்கூடிய கப்கேக்குகளை வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

ரெட் கப்கேக் செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை-2

ஜீனி -200 கிராம்.

வெண்ணை-  4 தேக்கரண்டி.

எண்ணை-4 தேக்கரண்டி.

வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட்-2 தேக்கரண்டி.

ரெட் புட் கலர்- தேவைக்கேற்ப சேர்க்கவும்.

மைதா மாவு-1 1/2கப்.

பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி.

பேக்கிங்சோடா-1/4தேக்கரண்டி.

உப்பு-2 சிட்டிகை.

பால்-4தேக்கரண்டி.

ப்ராஸ்டிங் செய்ய

வெள்ளை சாக்லேட்-50 கிராம்.

வெண்ணை-100கிராம்.

பவுடர் சக்கரை-75 கிராம்.

பால்-2 தேக்கரண்டி.

ரெட் கப்கேக் செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பவுலில் 2 முட்டையை எடுத்து கொண்டு நன்றாக கலக்கவும். பிறகு அதில் 200 கிராம் ஜீனியை சேர்க்கவும். வெண்ணை 4 தேக்கரண்டி, எண்ணை 4 தேக்கரண்டியை சேர்த்து நன்றாக கலக்கவும். இத்தோடு 2 தேக்கரண்டி வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்க்க வேண்டும். இத்தோடு ரெட் புட் கலர் கொஞ்சம் சேர்க்க வேண்டும். மைதா மாவு 1 ½ கப்,  1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும். ¼ தேக்கரண்டி பேக்கிங்சோடா, 2 சிட்டிகை உப்பு. இத்துடன் 4 தேக்கரண்டி பால் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்போது கப்கேக் செய்வதற்கான பதத்தில் மாவு தயார்.

இதையும் படியுங்கள்:
முளைகட்டிய பயறுகளில் இருக்கு அம்புட்டு சத்து!
ரெட் கப் கேக்

இப்போது சின்ன சின்ன கப்களை எடுத்து அதில் வெண்ணை தடவிய பிறகு மாவை சேர்த்து அவனில் 350°F ல் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

இப்போ ப்ரோஸ்டிங் செய்ய வெள்ளை சாக்லேட் 50 கிராமை உருக்கி வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் 100 கிராம் வெண்ணையை எடுத்து கொண்டு நன்றாக பீட் செய்து கொள்ளவும் அத்துடன் உருக்கி வைத்திருக்கும் சாக்லேட் மற்றும்75 கிராம் சக்கரை மற்றும் பால் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பீட் செய்யவும். ஒரு பைப்பிங் பேகில் கிரீம்மை போட்டு எடுத்து கொள்ளவும். அதை செய்து வைத்திருக்கும் கப் கேக்குகள் மேலே பரப்பி அலங்கரிக்கலாம். அவ்வளவுதான் சுவையான ரெட் கப் கேக்குகள் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com