சூப்பரான சுவையில் ‘பினா கோலாடா ஜூஸ்’ செய்யலாம் வாங்க!

பினா கோலாடா ...
பினா கோலாடா ...www.delish.com

பினா கோலாடா அன்னாசி பழச்சாறும், தேங்காய் பாலும் சேர்ந்த கிரீமியான காக்டைல் வகையாகும். இந்த பானம் போர்ட்டோ ரிக்கோவில் தோன்றியது. அங்கே இந்த ஜூஸூடன் வெள்ளை ரம் சேர்த்து செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல சற்று மாற்றி இந்த காக்டைலை வீட்டிலேயே எப்படி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

ப்ரோஷன் அன்னாசி பழ துண்டுகள்-1 ½ கப்.

தேங்காய் பால்-1/2 கப்.

சிறிதாக வெட்டிய இஞ்சி-1/2 தேக்கரண்டி.

எழுமிச்சை சாறு-1 தேக்கரண்டி.

சர்க்கரை- தேவையான அளவு.

ஐஸ்- 2கப்.

தண்ணீர்-3/4 கப்.

செய்முறை விளக்கம்:

முதலில் மிக்ஸியில் 1 ½ கப் ப்ரோஷன் அன்னாசி துண்டுகளை சேர்க்கவும். அன்னாசிப்பழத்தை துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் 4 மணி நேரம் வைத்து எடுக்கவும். அதுவே ப்ரோஷன் அன்னாசி துண்டுகளாகும். பிறகு அத்துடன் ¾ கப் தண்ணீரை சேர்க்கவும். இப்போது அரைத்து கொள்ளவும். பிறகு அத்துடன் பொடியாக நறுக்கிய ½ தேக்கரண்டி இஞ்சியை சேர்த்து அரைக்கவும். இப்போது அரைத்த ஜூஸை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும்.

இப்போது இதை திரும்பவும் மிக்ஸியில் சேர்த்து அத்துடன் தேங்காய் பால் ½ கப், சர்க்கரை தேவையான அளவு, எழுமிச்சை சாறு 1 தேக்கரண்டி, ஐஸ் கட்டிகள் 2 கப் சேர்த்து நன்றாக அரைக்கவும். இப்போது இந்த பினா கோலாடாவை கண்ணாடி கிளாசில் ஊற்றி சிறிதாக நறுக்கிய அன்னாசி துண்டுகளை மேலே தூவி பரிமாறவும். இந்த கோடைக்கு குளுகுளுன்னு பினா கோலாடா ஜூஸை தயார். வீட்டிலேயே ஒருமுறை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com