காரசாரமான இஞ்சி மிட்டாய் வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

இஞ்சி மிட்டாய்...
இஞ்சி மிட்டாய்...

ஞ்சி என்பது காலங்காலமாக இந்திய பாரம்பரியத்தில் நாம்  பயன்படுத்தி கொண்டிருக்கும் ஒரு கை மருந்தாகும். இஞ்சி சாப்பிடுவதால் குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் தீரும். சக்கரை வியாதி, புற்றுநோய், சளி போன்ற உடல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும். குமட்டல், வயிற்று பிரச்சனைகள் இருக்கும் சமயத்தில் இஞ்சியை காலையிலே வெறும் வயிற்றிலே சாப்பிடலாம்.

இஞ்சியை டீயிலே சேர்த்து குடிக்கலாம். அது மட்டுமில்லாமல் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இஞ்சியை தட்டிப் போட்டு நன்றாக கொதிக்க விட்டு பின்பு வடிகட்டி அதில் எழுமிச்சை சாறு 5 சொட்டுகள் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்கி காலையில் குடிக்கலாம்.

எனினும் இஞ்சி மிட்டாய் செய்து சாப்பிடுவதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் தீரும். ஒரு வாரம் வரை பாத்திரத்தில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கும் மிட்டாய் வடிவத்தில் கொடுப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள். சிறு வயதில் இஞ்சி மிட்டாய் சாப்பிட்டிருப்போம். ஆனால் அதனுடைய அருமையை அப்போது உணர்ந்திருக்க மாட்டோம். இஞ்சி மிட்டாயை எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இஞ்சி மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள்:

இஞ்சி-100 கிராம்.

ஜீனி-1 ½ கப்.

நெய்-1/2 தேக்கரண்டி.

உப்பு- ஒரு சிட்டிகை.

இஞ்சி மிட்டாய் செய்முறை விளக்கம்:

முதலில் இஞ்சியை தண்ணீரில் நன்றாக அலசி சுத்தம் செய்துவிட்டு அதன் தோலை நீக்கவும். இப்போது இஞ்சியை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
கர்ப்ப காலத்தில் Rh ஃபேக்டர் பற்றி பெண்கள் அறிய வேண்டியதன் அவசியம்!
இஞ்சி மிட்டாய்...

இப்போது அதை மிக்ஸியில் போட்டு ¼ கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் பாதியை எடுத்து வடிகட்டியில் வைத்து நன்றாக அழுத்தி சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும். இப்போது மீதம் இருப்பதை அப்படியே அந்த சாறுடன் சேர்த்துக் கொள்ளவும். இப்போது அதில் ஜீனி 1 1/2கப் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். இந்த கலவையை அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். மிதமான சூட்டில் வைப்பது போதுமானதாகும்.

இப்போது சக்கரை நன்றாக கரைந்து சற்று கெட்டியான பதத்திற்கு வரும் போது அதில் ½ தேக்கரண்டி நெய்யினை சேர்க்கவும். பிறகு சற்று கட்டியான பதம் வரும்வரை கிண்டி இறக்கவும். அதை ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி நன்றாக ஆற விடவும். பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். சளி, ஜலதோஷம், இருமல், தொண்டை வலி போன்றவை இருக்கும்போது சாப்பிடலாம். தினமுமே சாப்பிட்டாலும் நல்லதேயாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com