டேஸ்டியான ‘அவியல்’ மற்றும் ‘கோவக்காய் ஃப்ரை’ செய்யலாம் வாங்க!

Aviyal and Kovakkai fry recipes
Aviyal and Kovakkai fry recipesImage Credits: FoodyBuddy

‘அவியல்’ கேரளாவில் உருவான உணவு வகையாகும். இதில் 13 விதமான காய்கறிகளை வேகவைத்து சேர்ப்பார்கள். கேரளாவில் வாழையிலை உணவில் கண்டிப்பாக அவியல் இடம் பெற்றிருக்கும். பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது பீமனால் கண்டுப் பிடிக்கப்பட்டதுதான் அவியல் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்புமிக்க அவியலை சிம்பிளாக செய்யலாம் வாங்க.

அவியல் செய்ய தேவையான பொருட்கள்:

கேரட்-1கப்.

பீன்ஸ்-1 கப்.

சோனைக்கிழங்கு-1கப்.

அவரக்காய்-1கப்.

முருங்கைக்காய்- 1கப்.

நேந்திர வாழைக்காய்-1கப்.

கொத்தவரங்காய்-1கப்.

தேங்காய் -2கப்.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

தயிர்-1 கப்.

தேங்காய் எண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-10

உப்பு- தேவையான அளவு.

அவியல் செய்முறை விளக்கம்:

முதலில் கேரட் 1கப், பீன்ஸ் 1கப், முருங்கை 1 கப், அவரை 1 கப், கொத்தவரங்காய் 1கப், சேனைக்கிழங்கு 1 கப், நேத்திர வாழைக்காய் 1கப் ஆகியவற்றை நீளமாக வெட்டி நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

இப்போது மிக்ஸியில் தேங்காய் 2 கப்பை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். அதை இந்த காய்கறியில் சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 1தேக்கரண்டி கடுகு, 10 இலை கருவேப்பிலை சேர்த்து தாளித்து இதையும் சேர்த்து நன்றாக கிண்டவும். கடைசியாக தேவையான அளவு உப்பு, தயிர் 1கப் சேர்த்து கிண்டி இறக்கவும். பிறகு மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும். ரொம்ப டேஸ்டான அவியல் தயார். நீங்களும் கண்டிப்பா வீட்டில் ஒருமுறை  ட்ரை பண்ணிபாருங்க.

கோவக்காய் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:

கோவக்காய்-1கப்.

மிளகு-1 தேக்கரண்டி.

ஜீரகம்-1 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-5

நிலக்கடலை-1கப்.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் அரிசி பருப்பு சாதம் வித் கர்ட் கரி செய்யலாம் வாங்க!
Aviyal and Kovakkai fry recipes

கோவக்காய் செய்முறை விளக்கம்:

முதலில் ஃபேனில் மிளகு 1 தேக்கரண்டி, ஜீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, வரமிளகாய் 5, நிலக்கடலை 1 கப் சேர்த்து நன்றாக வறுக்கவும். இப்போது இதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்போது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கோவக்காயை நீளமாக வெட்டி 1கப் சேர்த்து கொள்ளவும். இப்போது இதை நன்றாக வறுத்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து செய்து வைத்திருக்கும் நிலக்கடலை பொடியை சேர்த்து கிண்டி இறக்கவும். இப்போது சுவையான கோவக்காய் ஃப்ரை தயார். நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com