‘வாவ்’ சுவையான ஒயிட் குஸ்கா வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

ஒயிட் குஸ்கா
ஒயிட் குஸ்காyoutube.com

குஸ்கா தென்னிந்தியாவில் பிரபலமான உணவு வகையாகும். இதை குருமாவுடன் சேர்த்து சாப்பிடவே மக்கள் விரும்புவார்கள். உருது மொழியில் ‘குசுக்’ என்றால் ‘உலர்ந்த’ என்று பொருள். இந்த உணவும் உலர்ந்து இருப்பதால் குஸ்கா என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எதுவாக இருந்தால் என்ன வீட்டிலேயே செஞ்சு அசத்திட வேண்டியதுதானே! சரி வாங்க. ஒயிட் குஸ்கா எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொட்கள்:

பாஸ்மதி அரிசி-1 ½ கிலோ.

நெய்- 1 குழிக்கரண்டி

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை- தேவையான அளவு.

முந்திரி -10

பாதாம்-20

நறுக்கிய வெங்காயம்-2

பச்சை மிளகாய்-6

இஞ்சி பூண்டு விழுது- 1 ½ தேக்கரண்டி.

கொத்தமல்லி, புதினா- தேவையான அளவு.

தயிர் -200கிராம்.

தக்காளி-1 ½.

உப்பு- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் ½ கிலோ பாஸ்மதி அரிசியை கழுவி ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு நன்றாக அகண்ட பாத்திரத்தில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய், ஒரு குழிக்கரண்டி நெய் சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் மசாலா பொருட்களான பட்டை,கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்த 2 பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் 6 சேர்த்து அத்துடன் 10 முந்திரி பருப்பை சேர்க்கவும். நன்றாக கோல்டன் பிரவுன் ஆன பிறகு அதோடு 1 ½ தேக்கரண்டி  இஞ்சி பூண்டு  விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அத்துடன் கொத்தமல்லி, புதினா ஒரு கைப்பிடி சேர்த்து வதக்கவும். ஒயிட் குஸ்காவிற்கு தயிர் மிகவும் முக்கியமானது அதுவே புளிப்பு சுவையை தரும். அதனால் 200 கிராம் தயிரை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
தூக்கம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகள்!
ஒயிட் குஸ்கா

இப்போது 20 பாதாமை ஊற வைத்து தோலூரித்து அரைத்து செய்த கலவையை அத்துடன் சேர்க்கவும். மேலும், 1½ தக்காளியை கடைசியாக சேர்த்துவிட்டு குஸ்காவிற்கு தேவையான உப்பை சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

தண்ணீர் கொதித்ததும் வடிகட்டி வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைத்து வேகவிடவும். 10 நிமிடத்திற்கு பிறகு   திறந்து புதினா, கொத்தமல்லி, நெய் சேர்த்து மூடிப்போட்டு குஸ்காவை தம்மில் வைத்துடுங்க. அரைமணி நேரம் குஸ்காவை நன்றாக வேகவைத்த பிறகு இறக்கிவிடவும்.

அவ்வளவுதான் சூப்பரான ஒயிட் குஸ்கா தயார். இதை வீட்டுல இருக்குறவங்களுக்கு செஞ்சு கொடுங்க, பிரியாணியே தோத்துடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com