முன்கூட்டியே மாவு அரைக்த் தேவையில்லை இந்த Benne தோசைக்கு.. அதெப்படிங்க?

Benne Dosa
Benne Dosa

தோசை மாவு இல்லாத சமையத்தில் உங்கள் குழந்தைகள் தோசைக் கேட்டு அடம் பிடிக்கிறார்களா? அல்லது உங்களுக்கு அந்த சமையத்தில்தான் தோசை சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அப்போது கண்டிப்பாக இந்த Bene தோசையை முயற்சி செய்து பாருங்கள்.

தேவையானப் பொருட்கள்:

வர மிளகாய் – 4 ( காஷ்மிர் மிளகாய் அல்லது குண்டூர் மிளகாய்)

அரிசி மாவு – 1 கப்

கடலை மாவு – 1/4 கப்

உருளைக்கிழங்கு – 1

பூண்டு – 3 முதல் 4

தயிர் - ½ கப்

தேவையான அளவு உப்பு

செய்முறை:

1. முதலில் ஒரு கிண்ணத்தில் வர மிளகாய் 4 எடுத்துக்கொள்ளவும். அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைக்க வேண்டும்.

2. மறுபுறம், இன்னொரு பாத்திரத்தில் 1 கப் அரிசி மாவு மற்றும் ¼ கப் அளவு கடலை மாவை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

3. பின்னர் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்போது அந்த கலந்து வைத்த மாவில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து மூன்று அல்லது நான்கு பூண்டு சேர்க்கவும்.

4. அதனுடன் ஊற வைத்த மிளகாய் சேர்த்துவிட்டு ஜாரில் மாற்ற வேண்டும். பின் ஒரு கப் அளவு தயிர் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக பேஸ்ட் போல் அரைக்க வேண்டும்.

5.  சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். ஏனெனில் உருளைக்கிழங்கில் தண்ணீர்  இருப்பதால் அதுவும் சேர்ந்து தண்ணீர் அதிகமாகிவிடும்.

6.  அரைத்து வைத்த பேஸ்டில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இப்படி ஒரு முறை மதுரை வெஜ் சால்னா செஞ்சு பாருங்க.. ஒரு இட்லி, தோசை கூட மிச்சம் இருக்காது! 
Benne Dosa

7.  இப்போது இந்த மாவைப் பயன்படுத்தி தோசை செய்தால் மணமும் சுவையும் அள்ளும். குறிப்பாக தோசையில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து செய்ய வேண்டும். இந்த தோசையை ஏன் Benne என அழைக்கிறார்கள் என்றால், இது கர்நாடகாவில் மிகவும் பிரபலமாகும். கர்நாடகாவில் Benne என்றால் வெண்ணெய் என அர்த்தம். எனவே இந்த தோசை செய்வதற்கு கட்டாயம் வெண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

காலையில் வேலைக்கு மற்றும் பள்ளிக்கு செல்பவர்களுக்கு இதுபோன்ற தோசையை விரைவாக செய்துக்கொடுத்தால், சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த தோசையுடன்  மிளகாய் சட்னி மற்றும் தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com