ருசியான கப்பக்கிழங்கு புழுக்கும் சின்ன வெங்காய தொக்கும்!

healthy Samayal tips
tasty recipes
Published on

ப்பக்கிழங்கு புழுக்கை வெங்காய சட்னி அல்லது சின்ன வெங்காய தொக்குடன் பரிமாற சூப்பரான காம்பினேஷன். செய்துதான் பாருங்களேன்.

கப்பக்கிழங்கு புழுக்கு:

மரவள்ளிக்கிழங்கு 1/4 கிலோ 

உப்பு தேவையானது

சின்ன வெங்காயம் 15 

காய்ந்த மிளகாய் 1 

பச்சை மிளகாய் 2 

கறிவேப்பிலை சிறிது

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

எலுமிச்சம் பழம் 1 மூடி

தாளிக்க: 

கடுகு, கருவேப்பிலை, சீரகம், தேங்காய் எண்ணெய்

மரவள்ளிக்கிழங்கை தண்ணீரில் போட்டு நன்கு கழுவவும். பிறகு தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும். மீண்டும் நறுக்கிய துண்டுகளை நீரில் கழுவி தேவையான உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து வேக விடவும். வெந்ததும் நீரை வடித்து விட்டு நன்கு அழுத்தி மசிக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய்2, காய்ந்த மிளகாய் 1, கறிவேப்பிலை, அரை ஸ்பூன் சீரகம் போட்டு தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, வெந்து மசித்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கு மசியலில் சேர்த்து கலக்கவும். கடைசியாக 1 மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து பரிமாற மிகவும் ருசியான கப்பக்கிழங்கு புழுக்கு தயார்.

சின்ன வெங்காய தொக்கு:

சின்ன வெங்காயம் 1/4 கிலோ

தனியா 2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்

மிளகாய் வற்றல் 10

வெந்தயம் 1/2 ஸ்பூன்

உப்பு தேவையானது

புளி சின்ன எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

வெல்லம் சிறிது 

இதையும் படியுங்கள்:
புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?
healthy Samayal tips

தாளிக்க: 

கடுகு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் தனியா, வெந்தயம், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சிறிது ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்தெடுக்கவும். புளியை அரை கப் தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்தெடுத்தெக்கவும்.

வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையை நல்லெண்ணெய் விட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு வெங்காயம் கலர் மாறும் வரை நன்கு வதக்கவும். பிறகு புளியை கரைத்த நீரை விட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நான்கு சுருளக் கிளற மிகவும் ருசியான சின்ன வெங்காய தொக்கு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com