ருசியான மற்றும் ஆரோக்கியமான கீரை போண்டா மற்றும் ரோஸ், பாதாம் மில்க்கின் செய்முறைகளைப் பார்ப்போம்.
கீரை போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய அரைக்கீரை - ஒரு கப்
கோதுமை மாவு- இரண்டு கப்
உளுந்து மாவு -அரை கப்
அரிசி மாவு - கைப்பிடி அளவு
ஊற வைத்த பயத்தம் பருப்பு- ஒரு ஸ்பூன்
நறுக்கிய சின்ன வெங்காயம்- கைப்பிடி அளவு
நறுக்கிய பச்சை மிளகாய்- ஐந்து
சீரகம்- சிறிதளவு
உப்பு , எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கீரை மூன்றையும் லேசாக வதக்கி, ஆற விட்டு மாவுகளில் சேர்க்கவும். இதனுடன் சீரகம், பருப்பு மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு தளர்வாக பிசையவும். கடாயில் எண்ணெய் காய வைத்து இந்த மாவில் விருப்பப்பட்ட அளவு உருண்டையாக உருட்டி போட்டு பொன்னிறமானதும் எடுத்து உங்களுக்கு பிடித்த சட்னியுடன் பரிமாறவும். அப்படியே சாப்பிட்டாலும் மிகவும் ருசியாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
பாதாம் ரோஸ் மில்க் செய்ய தேவையான பொருட்கள்:
பால்- 3 டம்ளர்
சர்க்கரை- அரை கப்
ஏலக்காய் - இரண்டு
ஊற வைத்து சீவிய பாதாம்- ஒரு டேபிள் ஸ்பூன்
ரோஸ் மில்க் எசன்ஸ்- ஒரு டீஸ்பூன்
செய்முறை:
பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடித்து வைக்கவும். பால் ஆறியவுடன் அதில் ரோஸ்மில்க் எசன்ஸ், பொடித்த சர்க்கரை சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். பின்னர் வெளியில் எடுத்து கிளாஸ் டம்ளரில் ஊற்றி மேலே சீவிய பாதாம் பருப்பு தூவி அலங்கரித்து கொடுக்கவும். சில்லென்று நாக்கிற்கு சுவை மிகுந்ததாகவும் கால்சியத்தை அள்ளிக் கொடுப்பதாகவும் இருக்கும் இந்த ரோஸ் மில்க்.