சூப்பரா சுவைக்கலாம் தக்காளி தோசை!

தக்காளி தோசை!
தக்காளி தோசை!tamil.indianexpress.com

க்காளி விலை மலிவாக இருக்கும் காலங்களில் தக்காளி ஊறுகாய், தக்காளி சட்னி போன்றவைகள் தாராளமாக வீடுகளில் செய்வோம். இந்த வகையில் டிபனுக்கு தக்காளி தோசை செய்து தந்தால் அனைவரும் சூப்பர் என்று உங்களை பாராட்டுவார்கள். தக்காளி தோசை எப்படி செய்வது பார்ப்போம்.

 
தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி- 2 டம்ளர்
பச்சரிசி - கால் டம்ளர்
வெந்தயம்- ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு  - ஒரு ஸ்பூன்
தக்காளி - 8 (மீடியம் சைஸ்)
வர மிளகாய் -எட்டு
பட்டை கிராம்பு லவங்கம் - தலா 2
சோம்பு -ஒரு தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
பெருங்காயம் - சிறிது

தாளிக்க:
பெரிய வெங்காயம் நறுக்கியது -இரண்டு கருவேப்பிலை கொத்தமல்லி- சிறிது

செய்முறை: 

ட்லி அரிசி, பச்சரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து அதனுடன் வரமிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும். அதிகம் நீரூற்றாமல் அரைக்கும்போது நறுக்கிய தக்காளிகளை சேர்த்து அரைக்கவும். எடுக்கும்போது பட்டை இலவங்கம் சோம்பு சேர்த்து எடுக்கவும். அரைத்து எடுத்த மாவில் தேவையான உப்பு பெருங்காயம் கலந்து வாணலியில் காய்ந்த எண்ணெயில் கடுகு தாளித்து அரிந்த  வெங்காயத்தை சிவக்க வதக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். அரிசி கழுவிய தண்ணீரை சேர்த்து ஆப்பமாவு பதத்தில் கலக்கவும்.

நன்றாக காய்ந்த தோசை சட்டியில் அடியில் சிறிது எண்ணெய் விட்டு ஆப்பம் ஊற்றுவதுபோல் கரைத்த தக்காளி தோசை மாவை சுற்றிலும் பரப்பி  எண்ணெய் ஊற்றி இருபுறமும் சிவந்த பின் எடுக்கலாம். ஓட்டையுடன் கிரிஸ்பியாக தனிச்சுவையுடன் இருக்கும் இந்த தக்காளி தோசை. மாவு அரைத்தவுடன் இரண்டு மணி நேரத்திலேயே கூட இந்த தோசையை புளிக்காமலேயே சாப்பிடலாம் என்பதே  இதன் சிறப்பு.

இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் அதிகம் வைத்து பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு சேர்த்த சட்னி அருமையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com