சூப்பர் பிரியாணிக்கு ஈஸி டிப்ஸ்!

சூப்பர் பிரியாணிக்கு ஈஸி டிப்ஸ்!
Published on

பிரியாணி செய்ய முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

முக்கியமாக, எவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறோம் என்பதுதான். 1 கப் பாசுமதி அரிசிக்கு – 1½ கப் தண்ணீர், 1 கப் சீரக சம்பா அரிசிக்கு - தண்ணீர் 2 கப், 1 கப் டி.டி.ரக பச்சரிசிக்கு – 2½ கப் தண்ணீர், 1 கப் - கவுனி அரிசிக்கு - 3 கப் தண்ணீர், 1 கப் குரும்பை சம்பாவுக்கு - தண்ணீர் 4 கப்.

* அரிசியைத் தண்ணீரில் போட்டு உடனடியாகக் கழுவி வடித்து வெள்ளைத் துணியில் உலர்த்த வேண்டும்.

* எந்த ஒரு பிரியாணிக்கும் தேவையான பொருட்களின் விகிதாசாரம் சரியான அளவில் இருக்க வேண்டும் (1 கிலோ அரிசிக்கு காய்கறிகள் 250 கிராம்)

* மசாலா, காய்கறி எல்லாமே ஃப்ரெஷ்ஷாக இருக்கவேண்டும்.

பிரியாணிக்கு எந்த வகை அரிசியைப் பயன்படுத்தணும்?

பிரியாணிக்கு பச்சரிசிதான் பெஸ்ட். குறிப்பாக, பாசுமதி, சீரக சம்பா, கவுனி அரிசி, குறும்பை சம்பா அரிசி, மல்லி சம்பா அரிசியிலும் செய்யலாம் இந்த வகை அரிசி அனைத்துமே மசாலாவை நன்றாக உள்வாங்கி வேகும். ஹைதராபாத் பிரியாணியை பாசுமதி அரிசியில்தான் செய்ய வேண்டும். செட்டிநாடு பிரியாணிக்கு சீரக சம்பா பொருத்தமானது.

கேஸ் அடுப்பைப் பயன்படுத்தி 'தம்' வைப்பது எப்படி?

வீட்டில் மூன்று நான்கு பேருக்கு பிரியாணி சமைப்பதாக இருந்தால், சாதாரண பாத்திரத்தில் பிரியாணியைத் தாளித்து வேண்டிய பொருள்களைச் சேர்த்த பிறகு, நன்கு பிசைந்த, கோதுமை மாவை பாத்திரத்தின் ஓரங்களில் சுற்றிலும் வைத்து மூடி போட்டு டைட்டாக மூட வேண்டும் பின்னர், தீயைக் குறைத்து அடுப்பில் பேன் வைத்து அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி அதன் மேலாக பிரியாணி பாத்திரத்தை வைத்து 'தம்' வைக்க வேண்டும்.

பிரியாணி வெண்மை நிறமாக இருக்க என்ன செய்யலாம்?

ஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் தவிர்க்கணும் காரத்துக்கு பச்சை மிளகாய் எப்போதும் அரை கப் பால் சேர்த்துச் செய்தால் பிரியாணி வெண்மையாக இருக்கும்.

பிரியாணிக்கும் புலாவுக்கும் உள்ள வித்தியாசம்...?

பிரியாணியில் வெங்காயத்தை பிரவுன் ஆக வதக்கணும், தக்காளி, இந்தியன் மசாலாக்களைப் பயன்படுத்துவோம். ஆனால், புலாவில் தக்காளி, இந்திய மசாலாக்கள் சேர்க்கக் கூடாது. வெங்காயத்தை லைட் பிரவுனாக வதக்கணும் காரத்துக்கு பச்சை மிளகாய் சேர்க்கணும். புலாவ் நிறம் மாறாமல் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com