வாவ் சொல்ல வைக்கும் வாழைத்தண்டு...

வாவ் சொல்ல வைக்கும் வாழைத்தண்டு...

* வாழைத்தண்டு சாறில் இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் உள்ளன.

* இது சிறந்த டையூரிடிக் பண்புகளை கொண்டிருப்பதால் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது.

* இது இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.

* இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதால், வாழைத்தண்டு சாற்றைத் தொடர்ந்து குடித்துவர ரத்தசோகை குணமாகும்.

* சிறுநீரக கற்கள் விரைவில் கரைய, குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.

* இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.

* வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும்.

* வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண் காயங்கள் ஆறும்.

* வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர, காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.

* வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம்.

* மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

* இதை அவ்வப்போது சேர்த்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

* வாழைத்தண்டு சாறு உடலில் அமிலத்தன்மை அளவை கட்டுப்படுத்த செய்யும். அமிலத்தின் சமநிலையை மீட்டெடுக்க உதவக்கூடும்.

* இதில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் குடல் இயக்கங்கள் சீராகிறது. செரிமானம் மேம்படுகிறது. மலச்சிக்கலும் வராமல் தடுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com