ஆற்றலைக் கொடுக்கும் அற்புத சக்தி!         

ஆற்றலைக் கொடுக்கும் அற்புத சக்தி!         

பெண்கள் மகிழ்வுடன் இருந்தால்தான் அந்த இல்லத்தில் எப்பொழுதும் சுபிட்சம் நிலைத்து இருக்கும். குடும்பத்தில் வருமானத்தை கொடுப்பது யாராக இருந்தாலும், பெண்ணானவளே மகாலட்சுமியாக கருதப்படுவாள்.

ந்த பூமியில் படைக்கப்பட்ட பெண்கள் எல்லோருமே மகாலட்சுமியின் ஸ்வரூபம் கொண்டவர்கள்தான். அதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது. ஒரு குடும்பம் சீரும் சிறப்புமாக, செழிப்பாக, வளமாக பல தலைமுறைகள் தழைக்க வேண்டும் என்றால் அது அந்த குடும்ப பெண்ணின் கையில்தான் உள்ளது.

ரு இல்லத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் நிறைந்து இருக்க குடும்பத்தில் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் மன நிறைவுடன் இருக்க வேண்டும். மனக்குறைவுடன் இருந்தால், குடும்பத்தில் பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கும். பெண்களுடைய மன அழுத்தத்தை குறைக்கக் கூடிய இந்த செயல் கேட்பதற்கே ஆச்சரியம் தரக்கூடிய வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய காலங்களில் எல்லாம் கன்னிப் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் அனைவருமே தலையில் பூ இல்லாமல் இருக்க மாட்டார்கள். ஒரு சிறு பூவாவது தலையில் எப்பொழுதும் வைத்துக் கொண்டு இருப்பார்கள். இதை மங்களகரமாகவும் அவர்கள் கருதி வந்தார்கள்.

குடு எடுத்து வாரி, தலை நிறைய பூ வைத்து, புடவை கட்டி, சிகப்பு நிற பொட்டு வைத்துக் கொண்டு இருக்கும் பெண்களுக்கு மன இறுக்கம் குறைவதாக பல சான்றுகள் கூறுகின்றன. எவ்வளவு பிரச்னைகள் அவர்களிடம் வந்தாலும், அதை துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள்.

பெண்கள் தலையில் பூச்சூடுவதால் நிறையவே நன்மைகள் உண்டாகிறது என்று அறிவியலும் ஒத்து கொள்கிறது. பெண்கள் விடாப்பிடியாக இருக்கும் சில விஷயங்களில் இருந்து மன மாற்றத்தை கொடுக்க தலையில் இருக்கும் பூவும் ஒரு காரணமாகும்.

து மட்டுமல்லாமல் பெண்கள் தலையில் பூ சூடுவதால் பிராண ஆற்றல் அதிகரித்து மனம் இலகுவாகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.

ரு விஷயத்தை பல கோணங்களில் சிந்திக்கும் ஆற்றலை கொடுக்கக்கூடிய அற்புதமான சக்தி இந்த வாசனை மிகுந்த மலர்களுக்கு உண்டு. குறிப்பாக மல்லி, முல்லை, ஜாதி போன்ற வாசனை மிகுந்த மலர்களை பெண்கள் தினமும் சூடிக்கொண்டால் அவர்களுக்கு ஒரு விஷயத்தில் சரியான முடிவு எடுக்கும் திறன் அதிகரிக்குமாம்.

இதனால் குடும்பத்தை அல்லது நிர்வாகத்தை வழி நடத்தக்கூடிய ஆற்றல் அவர்களிடம் அதிகரிக்கிறது. இதனால் வரக்கூடிய பிரச்னைகளும் பாதியாக குறைந்து விடுகிறது.

லை நிறைய பூ வைத்துக் கொண்டிருந்தால் மனம் ஒருமுகப்பட்டு, இறை சிந்தனை அதிகரித்து, மகிழ்ச்சியும் உண்டாகிறது என்று நம்பப்படுகிறது. அதனால்தான் திருமணம் ஆன புதிதில் பெண்கள் தினமும் மல்லிகை பூ வைத்து எப்பொழுதும் மனமகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

து மட்டுமல்லாமல் எப்பொழுதும் பெண்கள் தலையில் பூச்சூடுவதால் அனாவசிய சிந்தனைகள் தவிர்க்கப் படுகிறது. எனவே பெண்கள் தினமும் பூ வைத்து கொண்டு எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும், சந்தோஷமாகவும் இருந்துகொண்டு, குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com