ஆஸ்துமாவை தவிர்க்க சில யோசனைகள்!

ஆஸ்துமாவை தவிர்க்க சில யோசனைகள்!

Published on

ந்த மழைக் காலங்களில் வெயிலும்,வெளிச்சமும் குறைந்து காற்றில் அதிக அளவு ஈரப்பதம் உண்டாகும். இதனால் பலவித நோய்கள் எளிதில் நம்மைத் தாக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களை ஆஸ்துமா, சளி போன்ற நோய்கள் எளிதில் பாதிக்கின்றன. இந்தக் காலக்கட்டத்தில் ஆஸ்துமாவை கண்ட்ரோல் பண்ண சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மழை / குளிர் காலத்தை ஈஸியா சமாளிக்கலாம்.

ஸ்துமாவுக்கான முதன்மை காரணம் குளிர்ந்த காற்று. காற்றில் குளிர்ச்சி அதிகரிக்கும் போது மூச்சுக் குழலில் சுருக்கம், வீக்கம், சளி சேர்ந்து மூச்சு விட சிரமம் போன்றவை ஏற்படுகின்றன. மார்பில் வலி, மூக்கடைத்தல் என பெரும் கஷ்டமாகி படுக்கையில் தள்ளிவிடுகிறது.

லர்ஜி பலவிதங்களில் வரும்.சிலவற்றை‌நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.பல சமயங்களில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள், உண்ணும் உணவுகளால் பாதிப்பு ஏற்படுகிறது.

காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது படுக்கை உண்ணிகளும் அதிகமாகும். நாம் உபயோகிக்கும் தலையணை,மெத்தை இவற்றில் இருந்து கிருமிகள் அலர்ஜியை உண்டாக்கி மூச்சுத்திணறல் வரை கொண்டு விடுகிறது. ஆகவே நாம் பயன்படுத்தும் தலையணை, மெத்தை, போர்வை போன்றவைகளை வெயிலில் உலர்த்துவது நல்லது.

நுரையீரலை த் தாக்கக்கூடிய ஆர்.எஸ்.வி (respiratory syncytial virus) போன்ற வைரஸ்களும் மூச்சுக்குழலுக்கு அதிக பாதிப்பைத் தரும். குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

கொசுத்தொல்லைக்காக நாம் உபயோகிக்கும் கொசு விரட்டிகளும் ஆஸ்துமாவை அதிகப்படுத்தும்.

ஆஸ்துமாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியே செல்லும் போது கம்பளி ஆடைகள், காதுகளை மறைக்கும் குல்லா, முக கவசம் என அணிய வேண்டும்.

குளிர் காலம் ஆரம்பிக்கும் முன்பே ஃப்ளூ வாக்ஸின் என்ற இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை போட்டுக் கொள்வது நல்லது.

கொசு விரட்டிகளை தவிர்த்து கொசுவலை உபயோகிக் கலாம்.

வீட்டில் ஏ. சி. அறையில் ஆஸ்துமா நோயாளிகள் இருக்க படுக்கை உண்ணியால் வரும் பாதிப்பு வராது.

வெந்நீரில் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை துவைத்து உபயோகிக்கலாம்.

வெதுவெதுப்பான நீர், பானங்கள். ஃப்ரெஷ் ஆன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐஸ் சேர்க்காமல் பழச்சாறு அருந்தலாம்.

சரியான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு அலர்ஜி வரும் சூழல், பொருட்களை தவிர்ப்பது நல்லது .

மருந்துகளை தவறாது எடுத்துக் கொள்வதுடன் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஆஸ்துமாவை கண்ட்ரோல் பண்ணலாம்.

logo
Kalki Online
kalkionline.com