அரி நெல்லிக்காயின் நன்மைகள்!

அரி நெல்லிக்காயின் நன்மைகள்!

றுசுவையில் உப்பு சுவையைத் தவிர மற்ற ஐந்து சுவையும் இதில் அடங்கியுள்ளது. இதில் இரும்புச் சத்து,கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகமாக இருப்பதால் ரத்தசோகைக்கு சிறந்த மருந்தாக உள்ளது. கால்சியம் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புக்கும் நல்லது.

அரை கப் தண்ணீரில் 2 ஸ்பூன் நெல்லிச்சாறு சேர்த்து குடிக்க பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, மயக்கம் ,தலை சுற்றலை போக்கும். இதனை வளர்ந்து வரும் பிள்ளை களுக்கு கொடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நெல்லிக்காய் உடலில் உள்ள கழிவுகளை சிறந்த முறையில் வெளியேற்றும் சக்தி கொண்டது.

இதனை லெமன் ரைஸ் போல் கலந்த சாதமாக செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.

அரி நெல்லிக்காய் சாதம்:

ரி நெல்லிக்காய் ஒரு கப் பச்சை மிளகாய் 4 கருவேப்பிலை சிறிது உப்பு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தாளிக்க :கடுகு, கடலைப்பருப்பு 1 ஸ்பூன்,உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்.

நெல்லிக்காயை நசுக்கி கொட்டையை எடுத்துவிட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். வாணலியில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து கீறிய பச்சை மிளகாய் 4 சேர்த்து கடுகு வெடித்ததும் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள நெல்லிக்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். உதிர் உதிராக வடித்த சாதம் இரண்டு கப் சேர்த்து பெருங்காயத்தூள் கலந்து கிளறி பரிமாறவும். சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி. நெல்லிக்காயில் சர்க்கரை சேர்த்து ஜாமும் செய்யலாம்.

சிறு கிழங்கு:

தனை கூர்க்கன் கிழங்கு அல்லது காவத்தன் கிழங்கு என்றும் அழைப்பதுண்டு. இது ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் மாதத்தில் இருந்து பொங்கல் பண்டிகை வரை அதாவது தை மாதம் வரை மார்க்கெட்டில் கிடைக்கும். அப்போது இதனை வாங்கி காயவைத்து உலர்த்தி பொடியாக்கி சமையலில் மாவு போல பயன்படுத்தி கட்லட், வடை செய்யும் போது இந்த மாவையும் சேர்த்து செய்ய சுவை பிளஸ் மருத்துவ பயன் கிடைக்கும்.

இது உடல் எடையை குறைக்க உதவும். மலச்சிக்கலை போக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்கும். உடலில் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்கும். இதன் மருத்துவ குணம் காரணமாக வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம் நாட்டில் அதிக அளவில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சமையலுக்கு பயன் படுகிறது.

இதில் பீட்டா கரோடின் மற்றும் கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com