கருப்பு உப்பு
கருப்பு உப்பு

கருப்பு உப்பின் பயன்கள்!

நம் உண்ணும் உணவில் சுவையை தரக்கூடியது உப்பு தான். உப்பு சுவையை மட்டுமல்ல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக் கூடியது.

சாப்பாட்டுக்கு மிகுந்த சுவை அளிக்கக் கூடிய ஒரு பொருள் உப்பு. உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள் அது போல உப்பில்லாத உடம்பும் குப்பை தான்.

கல் உப்பும், தூள் உப்பும் சமையலில் அதிகமாக பயன்படுத்துவோம். ஆனால் கருப்பு உப்பு பற்றியாருக்கும் தெரிந்திருக்காது. அதன் மருத்துவ நன்மைகளைப் பற்றி இங்கே பார்க்க போகிறோம்.

*சாதாரண சோடியம் உப்பை விட கருப்பு உப்பு உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது.

*உண்மையில் இந்த கருப்பு உப்பில் தான் ஏராளமான தாதுக்கள், விட்டமின்கள் அடங்கியுள்ளன.

*உப்புச் சத்தும் நம் உடம்பிற்கு மிகவும் அவசியமான ஒன்று. போதுமான உப்பு சத்து இருந்தால் நம் உடம்பில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் எல்லாம் சமநிலையில் இருக்கும்.

*கருப்பு உப்பில், கடல் உப்பைவிட சோடியம் குறைவாகக் காணப்படுகிறது. இவை பெரும்பாலும் இமய மலைப் பகுதிகளிலிருந்தும், நேபாளப் பகுதியிலிருந்தும் எடுக்கப்படுகிறது. இதில் சோடியம் குளோரைடு உள்ளது.

கருப்பு உப்பு
கருப்பு உப்பு

*கருப்பு உப்பில் அதிக அளவு இரும்பு சத்து மற்றும் கனிமங்கள் உள்ளன.

* மூட்டு வலி உள்ளவர்கள் ஒரு கைப்பிடி அளவு உப்பை எடுத்துக்கொண்டு ஒரு வாணலியில் போட்டு வறுத்து அதன் பின் அதை எடுத்து துணியில் கட்டி வலியுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து மசாஜ் செய்தால் மூட்டுவலி இருந்த இடம் காணாமல் போகும்.

*கருப்பு உப்பை உணவில் சேர்த்தாலே சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.

* குளிக்கும் நீரில் கருப்பு உப்பைக் கலந்து குளித்தால், சருமத்தில் வெடிப்புகள் விழாமல், வழவழப்பாக இருக்கும்.

*இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்த இந்த கருப்பு உப்பைப் பயன்படுத்துகின்றனர்.

*கருப்பு உப்பு பயன்பாட்டின்போது உடலில் நீர் தேக்கம் , உப்புசம் போன்ற பாதிப்புகள் உண்டாவதில்லை.

*கருப்பு உப்பில் காரத்தன்மைக்கான பண்புகள் இருப்பதால் வயிற்றில் சுரக்கும் அதிக அமில உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது.

*எடை இழப்பிற்கான முயற்சியில் ஈடுபடுகிறவர்கள் கருப்பு உப்பை சேர்த்துக் கொள்ளலாம்.

*இந்த கருப்பு உப்பு சருமத்தில் உண்டாகும் வெடிப்புகளை போக்கவும் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கவும் உதவுகிறது.

*இது தூக்கத்தால் ஏற்படுகின்ற வாதப் பிரச்சினைகளையும் போக்கக் கூடியது ஆற்றல் கொண்டது.

* ஆஸ்ட்ரியோபோரோஸிஸ் பிரச்சனை இருப்பவர்கள் நிறைய தண்ணீர் மற்றும் கருப்பு உப்பு உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

எனவே கருப்பு உப்பை பயன்பாட்டின் மூலம் இந்த பிரச்சனைகளை எளிதாக துரத்தி விடலாம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com