கோடை காலத்தில் மாம்பழம் தரும் நன்மைகள்!

கோடை காலத்தில் மாம்பழம் தரும் நன்மைகள்!

- மகாலட்சுமி சுப்பிரமணியன்

கோடை வந்துவிட்டாலே மாம்பழம் நினைவிற்கு வந்தது விடும்.மாம்பழத்தில் பல ரகங்கள் உள்ளன.சுவையில் அசத்தும் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

மாம்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மிகுந்துள்ளது.இதை உண்பதால் உயர் ரத்த அழுத்தம் சீராகும்.மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

மாம்பழம் சாப்பிட நரம்பு தளர்ச்சியைப் போக்கும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .நல்ல கனிந்த மாம்பழத்தை சாப்பிட்டால் மாதவிடாய் சுழற்சி சீராகும். மாம்பழம் ஈறுகளுக்கு நன்மை பயக்கிறது.சிறுநீரக கற்களை கரைக்க க் கூடியது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

மாம்பழம் சாப்பிட எலும்புகளை பலப்படுத்தி செரிமானத்தை ஊக்குவிக்கிறது.மாம்பழத்தில் லுடீன்,ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால் கண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் ஒளியிலிருந்து கண்ணை பாதுகாக்கிறது.புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தோல் பளபளப்பிற்கும், முடி வளர்ச்சிக்கும் துணை புரிகிறது.

மாம்பழம் சுவை மிகுந்தது என்றாலும் அளவாக சாப்பிட நன்மைகள் பலவற்றையும் தரும்.

---------------------------------------------------

- ஆர்.பிரசன்னா

மாம்பழத்தில் ஃபோலேட், பீட்டா கெரட்டின், இரும்பு, வைட்டமின்கள் ஏ, வைட்டமின்கள் சி, கால்சியம், ஜிங்க் மற்றும் வைட்டமின் ஈ போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மாம்பழங்களை சாப்பிடுவதால் முகத்தில் உள்ள அடைபட்ட துளைகள் நீங்கும். மேலும் இது தோலில் எண்ணெய் உற்பத்தியை குறைக்க உதவுகிறது. 

மாம்பழத்தில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் இதில் அதிகம் உள்ளதால், இதய பகுதிகளில் உள்ள தமனிகளைத் திறந்து வைக்க உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

பல் வலி, ஈறு வலி, ஈறு வீக்கம், பல்லில் இரத்தம் வடிதல், பல் அசைவு போன்ற பிரச்சனைகள் குணமாக சிறிது மாம்பழத்தை வாயில் போட்டு எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக மென்று, 5 நிமிடம் வைத்திருந்து கீழே துப்பிவிட வேண்டும். பின்னர் உப்புநீர் கொண்டு வாய் கொப்பளித்தால் வழிகள் அனைத்தும் குணமாகும்.

மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.

மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.

கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்குப்படும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

மாம்பழத்தின் மிகவும் பிரபலமான ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று புற்றுநோயை எதிர்த்து போராடும் திறன் ஆகும். மாம்பழத்தில் உள்ள பெக்டின் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com