கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் சிறுநீர் கடுப்பு எரிச்சலுடன் சிறுநீர் கழிதல் தாகம் போன்ற பிரச்சினைகளுக்கு நீர்மோர் குடிப்பதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தினமும் தவறாமல் ஒரு கப் மோர் குடிப்பதால் உடலுக்கு அற்புதமான நன்மை கிடைக்கும்.
ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் மோர் குடிக்கலாம் மோர் இயற்கையான முறையில் மற்றும் சரியான வெப்ப நிலையில் குடித்தால் மிகுந்த நன்மை கிடைக்கும். மோர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கல்லீரல் மற்றும் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குகிறது.
மோரில் அதிகம் கால்சியம் உள்ளது எனவே மோர் குடிப்பதால் எலும்புகள் வலுவடையும்.
மோர் குடித்தால் அசிடிட்டி பிரச்சினையில் இருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கும்.
மோர் குறைந்த கலோரிகளைக் கொண்டது செரிமான அமைப்பை மேம்படுத்த மோர் குடிக்கலாம்.
மோர் உடல் சூட்டை தணித்து வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
மாதவிடாய் காலத்தில் வயிற்றில் ஏற்படும் வாயு பிரச்சனைக்கும் நிவாரணம் கிடைக்கும்.
கோடை காலத்தில் உடலை நீச்சத்துடன் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் மோர் குடித்து வந்தால் உங்கள் உடல் எப்போதும் நீர்ச்சத்துடன் இருக்கும்.
வெயிலில் வீட்டை விட்டு வெளியே செல்ல நேரிட்டால் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க முதலில் மோர் அருந்த வேண்டும்.
கோடை காலத்தில் தொடர்ந்து மோர் உட்கொள்வதால் வயிற்றில் வெப்பம் தணிந்து உள்ளிருந்து புத்துணர்ச்சியை பெறலாம்.
மோர் குடிப்பதால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் அளவு அதிகரிக்கிறது இது உடலின் எடையை குறைக்க உதவுகிறது.
மோர் வைட்டமின் சி மற்றும் பி ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
வெயிலில் செல்வதற்கு முன் மோர் குடிக்கலாம். ஆனால் வெயிலிலிருந்து வந்த உடனே குளிர்ந்த மோர் குடிக்க கூடாது.
உடலை நீர் சத்துடன் வைத்திருக்க வேண்டும் என்றால் தண்ணீருக்கு பதிலாக மோர் குடிக்க வேண்டும்.
இந்தக் கடுமையான வெயிலில் தினமும் மோர் குடித்து தாகத்தை தணித்து உடல் சூட்டை தணித்து பயன் பெறுவோம்.
மோரில் இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து குடித்தால் ருசியாகவும் நல்ல மணத்துடனும் இருக்கும். இத்தகைய மோரை ஒரு முறை குடித்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
மோர் தினமும் குடித்தால் உடல் வறட்சி நீங்குவதோடு உடலில் ஆற்றலும் அதிகரிக்கும்.
வெயில் காலத்தில் உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கண்டிப்பாக மோர் அருந்த வேண்டும். வேலையும் குறைவுதான் மோர் சத்துக்களின் களஞ்சியம் என்றால் மிகை அல்ல. உப்பு சர்க்கரை புதினாவை இதில் சேர்த்து மோர் குடித்தால் நீர் சேர்த்து குறைபாடு வயிற்றுப்போக்கு உஷ்ணம் ஆகியவை தவிர்க்கப்படும்.
அதிக வெப்பத்தால் பல நேரங்களில் கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்படும் மோர் குடிப்பதால் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சி கிடைக்கும் அதனால் கண்களில் இருக்கும் எரியும் உணர்வு நீங்கும் கண்களுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும்.
வெயில் சூட்டால் சருமத்தில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால் மோரை சருமத்தில் தடவலாம் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
கடுமையான இந்த வெயில் நேரத்தில் தினமும் மோர் கொடுத்து உடல் சூட்டை தணித்து தாகத்தை தணித்து பயன்பெறுவோம்.