கண்களில் கருவளையம் மறைய வேண்டுமா இதை செய்து பாருங்கள்!

கண்களில் கருவளையம் மறைய வேண்டுமா இதை செய்து பாருங்கள்!

"கண்களில் கருவளையம் ஏற்படக் காரணம் தூக்கமின்மை, மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு, முதுமை, டீஹைட்ரேஷன், உணவில் அதிக உப்பு சேர்ப்பது போன்றவையே."

கருவளையத்தைக் காணாமல் போகச் செய்ய சில டிப்ஸ்:

  • 2 துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து கழுவினால் நாளடைவில் கருவளையம் மறைந்து போகும்

  • ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு கலந்து கண்களுக்கு கீழே, ஒரு நாளுக்கு இரு முறை தடவி வந்தால், கருவளையம் மறைய ஆரம்பிக்கும்.

  • பாதாம் எண்ணெயை கண்ணுக்கு அடியில் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால், கருவளையம் மறையும்.

  • உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, பஞ்சில் தொட்டுஇரவில் தூங்கும் முன்பு கண்ணைச் சுற்றி தடவி உலரவிட்டு, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கண் கருவளையம் மறைந்து விடும்.

  • சோற்றுக் கற்றாழையின் தோலையும் முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து வந்தால் கருவளையம் மறையும்.

  • மஞ்சளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கண்களை சுற்றி தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரினால் நாளடைவில் கருவளையம் மறைய ஆரம்பிக்கும்.

  • ஒரு பௌலில் வெதுவெதுப்பான நீரில் மூன்று தேநீர் பைகளைப் போட்டு,10 நிமிடங்கள் ஊறிய பின் அதை எடுத்து ஃபிரிட்ஜில் ஃப்ரீசருக்குள் 20 நிமிடங்கள் வைத்து விட வேண்டும். தேநீர் பைகள் போதுமான அளவு குளிர்ந்தவுடன், அவற்றை எடுத்து அதன் குளிர்ந்த தன்மை போகிற வரைக்கும் கண்களை மூடிக்கொண்டு, கண்ணுக்கு மேலே வைக்க வேண்டும். இது கண்களின் சூட்டை குறைப்பதோடு கருவளையங்ளை விரைவாகப் போக்க உதவி செய்யும்.

  • மஞ்சள் தூளுடன் சிறிது மோர் கலந்து பேஸ்ட் போல் செய்து, அதை கருவளையங்கள் மீது தடவி வந்தால் கருவளையம் குணமாகும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com