பாதாம் பிசினில் எவ்வளவு விஷயங்கள் இருக்கு தெரியுமா?

பாதாம் பிசினில் எவ்வளவு விஷயங்கள் இருக்கு தெரியுமா?

பாதம் பிசினை தேவையான அளவு ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் கழித்து பார்த்தால் பாதாம் பிசின் ஜெல்லி போல மிருதுவாக இருக்கும் . இதனுடன் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வருவதால், பல மருத்துவ பலன்களை பெறலாம். பாதாம் பிசினில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது அதிக மருத்துவ குணங்களை கொண்டது.

பாதாம் பிசின் சாப்பிடுவதால் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்கள் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கின்றது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

நீண்ட நாள் நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு உடலில் சத்து இன்றி மெலிந்து இருப்பார்கள், இவர்கள் வாரத்திற்க்கு மூன்று நாட்கள் பாதாம் பிசினை ஊற வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கும்.

பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்க்கு உறுதியாக நின்று உடலில் தாது

பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வறட்சியை, வெடிப்புகளை குணமாக்கும்.

ஆண் மலட்டு தன்மை உடையவர்கள் தினமும் இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து குடித்து வந்தால் நரம்புகள் வலு பெற்று மலட்டு தன்மை நீங்கும்.

குழந்தை பெற்ற தாய்மார்கள் உடலில் சக்தி இழந்து இருப்பார்கள் இவர்கள் பாதம் பிசின் கலந்த பாலை சாப்பிடுவதால் கருப்பையில் உள்ள நச்சு நீங்கி உடல் வலுவடையும்,

உஷ்ணத்தால் உடலில் நீர் சுருக்கு, சிறுநீர் அடைப்பு, சிறு நீரக கல் போன்றவைகள் வரும் . இதனை தவிர்க்க ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வர மேற்கூறிய உஷ்ண நோய்கள் தீரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com