சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க ஈஸி எனர்ஜி ட்ரிங்க்! நட்ஸ் மில்க் ஷேக்!

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க ஈஸி எனர்ஜி ட்ரிங்க்! நட்ஸ் மில்க் ஷேக்!

பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் காலையில் 7.30 மணியிலிருந்து 7.45 மணிக்குள் மணிக்குள் வீட்டிலிருந்து கிளம்பி விடுகிறார்கள். ஸ்கூல் வேன் அல்லது பஸ்ஸில் அந்த நேரத்தில் கிளம்பினால் தான் சரியான நேரத்துக்குள் பள்ளியைச் சென்று அடைய முடியும். இதற்காக அவர்கள் குறைந்தபட்சம் 5.45 மணிக்கு எழுந்து கொண்டாக வேண்டும். இன்றைய குழந்தைகள் புராஜெக்ட்டுகள், தினசரி வீட்டுப்பாடங்கள், பாடத் திட்டம் தாண்டியும் கற்க வேண்டிய இதர எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டிகளான செஸ் வகுப்பு, அவுட்டோர் ஸ்போர்ட்ஸ் பயிற்சிகள், ஃபைன் ஆர்ட்ஸ் வகுப்புகள் என இரவிலும் தாமதமாகத் தான் தூங்கச் செல்கிறார்கள்.

இதனால் என்ன ஆகிறது தெரியுமா?

சரியான நேரத்துக்கு சரிவிகித உணவு எடுத்துக் கொள்வது பல நேரங்களில் முடியாமல் ஆகி விடுகிறது. 100 ல் 10 குழந்தைகள் மிகச்சரியாக எல்லாவற்றையும் பின்பற்றினாலும் பெரும்பாலான குழந்தைகள் ஒன்று ஒழுங்காக உண்ணாமல், உடற்பயிற்சிகளில் ஈடுபட நேரமின்றி அனீமிக்காக ஆகி விடுகிறார்கள் அல்லது அதிகமாக உண்டு ஒபிஸிட்டி பிரச்சினையை அனுபவிக்கிறார்கள்.

இதில் இருந்து தப்பிக்க இந்த நட் மில்க் ஷேக் உங்களுக்கு உதவலா.

சத்துக்கள் மிகுந்த உலர் பழங்கள் மற்றும் விதைகளை அரைத்து அவற்றுடன் பால் கலந்து தயாரிக்கும் இந்த நட்ஸ் மில்க் ஷேக் அதிகமாக உண்பதைத் தடுப்பதுடன் அனீமிக்காக இருக்கும் குழந்தைகளுக்குத் தேவையான சரிவிகித டயட்டையும் ஈடு செய்கிறது.

அதை எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்:

1. முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்

2. பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்

3. பிஸ்தா – 1 டேபிள் ஸ்பூன்

4. காய்ந்த திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்

5. பேரீட்சை- 1 டேபிள் ஸ்பூன்

6. பால் – 2 கப்

7. தண்ணீர்- தேவையான அளவு

8. சர்க்கரை அல்லது தேன் – விரும்பினால் சேர்க்கலாம், பொதுவில் தேவையில்லை

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு அவற்றை ஒருமுறை சுத்தமான நீரில் கழுவி விட்டு முதல் நாள் இரவே அவை மூழ்கும் அளவுக்கான தண்ணீரில் ஊற வைத்து விடவேண்டும். பிறகு காலையில் எழுந்ததும் பாலில் அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அளவாகத் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆற விடவும்.

பால் வெது வெதுப்பான சூட்டுக்கு வந்ததும் அதில் கால் டம்ளர் அளவு பாலை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். இப்போது ஊற வைத்திருந்த உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் கலந்த கலவையில் தண்ணீரை வடிகட்டி தோல் நீக்கி கால் டம்ளர் பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளலாம். எதற்காக முதலில் குறைந்த அளவு பாலில் அரைப்பது என்றால் அப்போது தான் நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் நன்கு அரைபடும். திப்பித் திப்பியாக அவை சரியாக அரைபடாமல் தடுக்க இப்படி முதலில் ஸ்மூத்தி செய்து எடுத்துக் கொண்டு கடைசியாக மீதமுள்ள பாலையும் கலந்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக இரண்டு முறை அடித்து இறக்கினால் போதும் நன்கு சத்தான நட்ஸ் மில்க் ஷேக் தயார்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவில் இரண்டு கப் நட்ஸ் மில்க் ஷேக் கிடைக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் காலையில் இதை அருந்தி விட்டு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு விட்டுச் சென்றால் போதும் 10. 45 க்கு பள்ளியில் ஸ்னாக்ஸ் பிரேக் வரை தாங்கும்.

முழுப்பட்டிணியாக சரியாக உண்ணாமல் அரக்க பரக்க ஓடும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் அடம் பிடிக்காமல் ஒரே மூச்சில் அருந்தி விட்டு சந்தோசமாகப் பள்ளிக்குப் பறந்து விடுவார்கள்.

குழந்தைகள் மட்டுமல்ல இந்த மில்க் ஷேக் பெரியவர்கள் முதல் அனைவரும் அருந்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com