முக்கனிகளின் முக்கியத்துவமும், எண்ணற்ற சத்துகளும்!

முக்கனிகளின் முக்கியத்துவமும், எண்ணற்ற சத்துகளும்!

முக்கனிகள் எனப் போற்றப்படுபவை மா, பலா, வாழை. முன்பெல்லாம் திருமண விஷேங்களில் இலையில் பரிமாறப்பட்ட பதார்த்தங்களில் முக்கனிகள் முக்கிய இடம் பெற்றன. ஒற்றுமையால் நன்மை உண்டு என்பதை விளக்குபவை முக்கனிகள். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலகட்டத்தில், பாண்டிய நாட்டில் மாம்பழமும், சோழ நாட்டில் வாழையும், சேர நாட்டில் பலாப்பழமும், அந்தப் பகுதிகளின் மண் வளத்திற்கேற்ப அதிகமாக விளைந்தன. வெவ்வேறு சுவை கொண்ட முக்கனிகளை கூட்டாகவும், தனித்தனியாகவும் உண்பது உடல் நலத்துக்கு நன்மை அளிக்கும் என்ற கருத்து பழைய பாடல்களில் உள்ளது.  வாழைப்பழம் வாழ வைக்கும்; மாம்பழம் இளமை மங்காமல் பார்த்துக் கொள்ளும்; பலாப்பழம் பலத்தை கொடுக்கும்.

மிகுந்த சுவைமிக்க முக்கனிகளில் ஏராளமான சத்துக்களும் உள்ளன. பழங்களின் அரசன் எனப் போற்றப்படுவது மாம்பழம்.

மாம்பழத்தில் உள்ள சத்துகளும், பயன்களும்;

மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி, இ, பி6, நார்ச்சத்துகள், வைட்டமின்கள், இரும்புச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் பாலிபீனாலிக் ஃபிளவனாய்ட் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. கண் பார்வை, மாலைக்கண் நோயை எதிர்க்கிறது. வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மாம்பழம் சாப்பிடுவோரின் தோலின் நிறம் கூடி முகத்தில் பொலிவு உண்டாகும். கல்லீரல் குறைபாடுகள் விலகும். புது இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. மார்பகம், ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் மாம்பழத்தில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் உள்ள  நார்ச்சத்து செரிமானத்தைத் தூண்டி மலச்சிக்கலைப் போக்குகிறது. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவுவதால் பெண்களுக்கு ஏற்றது.

பலாப்பழத்தில் உள்ள சத்துகளும், பயன்களும்;

லாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, கரோட்டின் பி, கார்போஹைட்ரேட், கால்சியம், புரதம் போன்ற சத்துக்களும், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ் போன்ற தாது உப்புக்களும் உள்ளன.  நல்ல பார்வைத் திறன் தருகிறது. நுரையீரலை நன்கு செயல்பட உதவுகிறது. மாம்பழத்தைப் போலவே பலாவிலும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், குடலைப் பாதுகாக்கிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. 

வாழைப்பழத்தில் உள்ள சத்துகளும், பயன்களும்;

ங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கக்கூடிய அற்புதமான பழம் வாழை. வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்தது. வாழையில் உள்ள 'ஃபரக்டோஸ்’  என்ற சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்குத் தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னையைத் தீர்த்து, மலமிளக்கியாக செயல்படும். இதில் உள்ள வைட்டமின் பி6, ரத்த சோகை போன்ற குறைபாடுகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும். இதயத் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

யாரெல்லாம் முக்கனிகளைத் தவிர்க்கவேண்டும்?

மாம்பழம் மற்றும் பலாப்பழத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்கவேண்டும். உடல் உஷ்ணம் நிறைந்தவர்கள், ஆர்த்ரிடிஸ், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு சிறிய துண்டு மாம்பழம் மட்டுமே சாப்பிடவேண்டும்.

வாழைப் பழத்தில் பொட்டாசியம்அதிகம் உள்ளது. இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள் டாக்டரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்வது அவசியம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு அதிகம் இல்லாத செவ்வாழையை உண்ணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com