மழைக் காலங்களில் குழந்தைகள் பாதுகாப்பு.

மழைக் காலங்களில் குழந்தைகள் பாதுகாப்பு.

குழந்தைகள்தான் இந்த மழை சீசனில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாவர்கள். இந்தக் காலங்களில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். சளி, காய்ச்சல் அலர்ஜி பிரச்னைக்கு நாம் வீட்டிலேயே கவனமாக இருந்தால் மழைக்கால நோய்கள் வராமல் தடுக்கலாம். முக்கியமாக குழந்தைகள் மழையில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*குழந்தைகளுக்கு உடல் கதகதப்பாக இருக்கும்படியான ஆடைகளை அணிவிப்பது நல்லது.

*திக மழை பெய்தாலும் தினசரி குழந்தைகளைக் குளிக்க வைக்க வேண்டும்.

*சுத்தமான, சூடான உணவுப் பொருட்களை கொடுக்கவும். எண்ணெய் பதார்த்தங்கள், பேக்கரி அயிட்டங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது .

*ந்தப் பருவத்தில் நோய்த் தொற்று மிக வேகமாக பரவும் என்பதால் பள்ளியில் இருந்தும், வெளியில் விளையாடி வந்ததும் கண்டிப்பாக கை, கால்களை கழுவச் செய்ய வேண்டும்.

*சிறு குழந்தைகளை மிகவும் பாதுகாப்பான சூழலில் வைக்கவும்.

*குழந்தைகளுக்கு சளி, ஜீரணம் எனில் பள்ளிக்கு அனுப்பாதீர்கள். மற்ற குழந்தைகளுக்கும் உடனடியாகப் பரவும்.

*ஸ்த்துமா, அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்வது நல்லது.

*ஸ்லைடர் ஃப்ளூ தடுப்பூசியை அவசியம் எனில் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளலாம்.

*ந்தக் காலத்தில் ஷாப்பிங் மால், கடற்கரை, திருவிழா போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

*திக காய்ச்சல், உடல்வலி எனில் சுயமருத்துவம் செய்வதை விடுத்து டாக்டரிடம் அழைத்துச் சென்று ட்ரீட்மென்ட் தரவேண்டும்.

*வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்காது பார்த்துக் கொள்வதுடன்\, கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். தூங்கும் போது கொசுவலை உபயோகிக்கலாம்.

*காய்ச்சிய நீரையே பருகத் தரவும். தேன், எலுமிச்சை, இஞ்சிச்சாறு மூன்றையும் சம அளவு கலந்து குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவது டன் இருமல், சளி அண்டாது.

*சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் அளவான சாம்பிராணி புகை போட தரை, அறை ஈரப்பதம் இல்லாமல் சளி பிடிக்காது. பெரிய பிள்ளைகளுக்கு நொச்சி இலை, துளசி, ஓமவல்லி இவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டு ஆவி பிடிக்க சுவாசத்திற்கு நல்லது.

மொத்தத்தில் சிறு சிறு விஷயங்களில் கவனமாக இருக்க, குழந்தைகள் நலம் பாதுகாக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com