பூக்களின் மருத்துவப் பயன்கள்.

பூக்களின் மருத்துவப் பயன்கள்.

ஆரோக்கியத் தகவல்!

பூக்கள் இறை வழிபாட்டிற்கு மட்டுமன்றி நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவி புரிகிறது. சில பூக்களின் பயன்களைப் பார்ப்போம்.

முருங்கைப் பூ ; இதை உணவில் சேர்ப்பதால் கண்கள் குளிர்ச்சி அடையும். உடல் உறுப்புகள் சீராக வளர்ச்சி அடையும். அதிகமான பித்தத்தை ப் போக்கி, மூட்டு வலியைக் குறைக்கும். ஆண்மையைப் பெருக்கி , தாய்ப்பால் பெருகவும் துணைபுரிகிறது.

வெங்காயப் பூ ; குடல் தொடர்பான பல பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது. குன்ம நோய்களைப் போக்கும்.

வாழைப் பூ ; வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், இருமல், கை கால் எரிச்சல் போன்றவற்றிற்கு நிவாரணம் தருகிறது. பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான பாதிப்புகளைக் குறைக்கிறது. வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்துகிறது.

அகத்திப் பூ ; உடல் அழற்சியைப் போக்கி வெயிலினால் ஏற்படும் பித்தத்தைக் குறைக்கிறது.

தாமரைப் பூ ; தலை எரிச்சல், தலை சுற்றலை போக்கும். மன உளைச்சலைப் போக்கி மன‌அமைதி தந்து நல்ல தூக்கத்தைத் தரும். இதயத்துக்கு வலுவூட்டி இதயம் நன்கு செயல்பட துணைபுரிகிறது.

வேப்பம் பூ ; தொடர் ஏப்பம், வாந்தி, குடற்பூச்சிகளை அகற்றும். பித்தத்தை தணிக்கிறது. தலைமுடி சம்பந்தமான பாதிப்புகளைக் குறைக்கிறது. பொடுகு, பேன் தொல்லைகளை போக்குகிறது.

ஆவாரம் பூ ; இதை வதக்கி ஒரு மெல்லிய துணியில் வைத்து கட்டி கண்ணை சுற்றி ஒத்தடம் கொடுக்க, கட்டியினால் உண்டாகும் கண்நோய்களைப் போக்கும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும். உடல் எடைக் குறைக்க உதவி புரிகிறது. மேனி எழிலைப் பாதுகாத்து பளபளப்பைத் தருகிறது.

புளியம் பூ ; பித்தத்தை நீக்கும். நாவின் சுவையின்மை யைப் போக்கும். இரத்தசுத்திக்கு உதவியாக இருக்கும் .

தென்னம் பூ ; பால்வினை நோய்களைக் குணப்படுத்தும். வெள்ளைப்படுதல், இரத்தப் போக்கு விஷக்கடி போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் தருகிறது.

பனம் பூ ; பல்நோய், வாதம் நாள்பட்ட ஜுரத்தைக் கட்டுப்படுத்துகிறது.

செண்பகப் பூ ; வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.

பாதிரிப் பூ ; காது கோளாறுகளை சரிசெய்யும்.செரிமான சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல், தேக த்தில் ஏற்படும் ஊறலை குணப்படுத்துகிறது.

மகிழம் பூ ; தலையில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. பல்வலி, பல்சொத்தையைப் போக்குகிறது.

செந்தாழம் பூ ; தலைவலியைப் போக்கும். கபம், ஜலதோஷம், வாதநோய்களை குணமாக்குகிறது.

மல்லிகைப் பூ ; மன அமைதிக்கு மருந்தாகிறது. கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது.

மாதுளம் பூ ; உடல்வெப்பம், ரத்த மூலத்தை சரிசெய்கிறது. பித்த வாந்தியைக் கட்டுப்படுத்தும். இரத்தசோகையைப் போக்குகிறது.

இப்படி பல மருத்துவ குணங்களைக் கொண்ட பெரும்பாலான பூக்கள் தன்னகத்தே கொண்டுள்ளன. அவற்றைக் கண்டறிந்து பயன்பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com