இனிக்கும் இஞ்சியின் மருத்துவம்!

இனிக்கும் இஞ்சியின் மருத்துவம்!

நேற்று ஞாயிற்றுக் கிழமை ஆயிற்றே. விடுமுறை நாள் என்பதோடு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அமர்ந்து உணவு உண்ணக் கிடைத்திருக்கும் ஒரே ஒரு நாள் என்பதால் அனேக வீடுகளில் நேற்று சமையல் விருந்துச் சமையலாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். நன்கு காரசாரமாகச் சமைத்து பேசிக் கொண்டே ஒரு பிடி அதிகமாக உண்டிருப்பீர்கள். அப்படி உண்பதில் தவறேதும் காண முடியாது. ஆனால், ஓடியாடி விளையாடும் குழந்தைகள், சுறு சுறுப்பாக உடற்பயிற்சிகளில் ஈடுபடக்கூடிய இளைஞர், இளம்பெண்கள் தவிர 40 வயது கடந்த அனைவருக்குமே இப்படி ஒரு விருந்துச் சாப்பாடு சாப்பிட்டதும் நேரம் ஆக ஆக ஒரு வித நிலைகொள்ளாமை தலைதூக்கும். எதுக்களித்தல் , வயிற்று உப்பிசம், தலைவலி, அஜீரணக் கோளாறு, மறுநாள் காலை எழுந்ததுமே இயற்கைக் கடன் கழிக்க முடியாத அளவுக்கு மலச்சிக்கல் தொல்லைகள் எனப் பலரும் பலவிதமாக அவஸ்தைப் பட நேரிடலாம். முறையான முன்னேற்பாடுகளும், கொஞ்சமே கொஞ்சம் எச்சரிக்கை நடவடிக்ககளும் இருந்தால் போத்ம் இவை எல்லாம் தவிர்க்கக் கூடிய சின்னப் பிரச்னைகளே!

அதற்காகத் தான் நம் பாட்டி வைத்திய முறையில் இஞ்சி என்றொரு அற்புத மருந்து இருக்கிறதே!

Ø இஞ்சியைப் பயன்படுத்தி எந்தெந்த முறைகளில் எல்லாம் நாம் நமது உடல்நலனைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று இப்போது அறிந்து கொள்வோம்.

Ø அரை விரல் நீள இஞ்சியை எடுத்துக் கொண்டு சின்னக் கல்லுரலில் தட்டிச் சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும். இந்த இஞ்சிச் சாற்றை பாலில் கலந்து சாப்பிட வயிறு சம்மந்தமான நோய்கள் தீரும், உடம்பும் இளைக்கும்.

Ø குடும்த்தில் அனைவருக்கும் எனில் அதே விரல் நீள இஞ்சியை அரைத்துத் துவையல் மற்றும் பச்சடி செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், களைப்பு மற்றும் மார்பு வலி தீரும்.

Ø இஞ்சிச் சாற்றில் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் வாதக்கோளாறுகள் நீங்கி உடல் பலம் பெறும்.

Ø இஞ்சியைப் புதினாவோடுசேர்த்து அரைத்து துவலையலாக்கி சாப்பிட்டு வந்தால் பித்தல், அஜீரணம், வாய் துர்நாற்றம் தீரும். மேலும் சுறுசுறுப்பாகவும் உணர்வோம்.

Ø தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இஞ்சிச் சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்று, மலச்சிக்கல் தீர்வதோடு, சருமம் பொலிவாகி உடல் இளமை பெறும்.10 கிராம் இஞ்சி, இரண்டு பூண்டு இரண்டையும் கலந்து அரைத்து ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி தீரும்.

Ø வெயில் நேரங்களில் ஒரு துணுக்கு இஞ்சியைத் தட்டிப்போட்டு மோரில் கலந்து அருந்தினால் போதும் வயிறு சில்லிட்டு மூளை புத்துணர்வாகி விடும். ஆரோக்ய விஷயத்தில் கண்ட கண்ட குளிர்பானங்களைக் காட்டிலும் இது எவ்வளவோ மேல்.

ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால் இஞ்சி இல்லையென்றால் நம் தென்னிந்தியச் சமையல் முற்றுப் பெறாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com