இயற்கை முறை பற்பொடிகள்...

இயற்கை முறை பற்பொடிகள்...

சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய், இந்துப்பு இந்த நான்கையும் தலா 10 கிராம் எடுத்து, ஒன்றாகச் சேர்த்து இடித்து, பொடி செய்து, இந்தப் பொடியால் பற்களைத் துலக்கினால் பல் ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் ஆடுவது, சொத்தையாவது போன்ற பிரச்னைகள் தீரும்.

வங்கம், சீரகம் ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது இந்துப்பு சேர்த்து பல் தேய்த்தால் அஜீரணம், வாந்தி போன்றவை குணமாகும்.

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடி திரிபலா சூரணம் என்றழைக்கப்படுகிறது. இது பற்களைக் காக்கும் அருமருந்து எனலாம்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது இவை ஈறுகளை பலப்படுத்த உதவுகிறது.

தான்றிக்காய் பற்குழிகள் வராமல் தடுக்கிறது.

டுக்காய் வாய்ப்புண்ணை ஆற்றவும் சொத்தை பல் பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

சிறிது வறுத்த ஓமத்தின் பொடி, மாசிக்காய், லவங்கப்பட்டை, மிளகு, காய்ந்த துளசி புதினா இலைகள், ஆகியவற்றின் பொடிகளைக் கலந்து செய்யப்பட்ட பொடியை பயன்படுத்தலாம். பற்கள் உறுதி பெறும்.

லமரத்தின் குச்சியை உடைத்து அதனைப் பற்களில் தேய்த்துவர பற்கள் உறுதி பெறும். மேலும், ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

வேலங்குச்சிகள் மட்டுமின்றி மா, தேக்கு, மருது, நாவல், விளா, நொச்சி, புங்கை மர குச்சிகளையும் பல் தேய்க்க பயன்படுத்தலாம் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com